கோயம்பத்தூரில், நாளை பிப்ரவரி ஒன்றாம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம்.
மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.
Also Read: 3வது பட்டியலை வெளியிட்ட விஜய்.! புதிய 19 மாவட்டங்களுக்கான தவெக நிர்வாகிகள் லிஸ்ட்
கோவயில் நாளை மின்தடை: 01-02-2025
இந்நிலையில், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Budget 2025: ராணுவத்தில் ட்ரோன்கள்: பாதுகாப்புக்கு கூடுதலாக நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ள இந்திய அரசு.!
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
உக்கடம் துணை மின் நிலையம்: டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி,வெரைட்டி ஹால் சாலை, தியாகி குமரன் மார்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக் கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் புறவழிச்சாலை, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர்,லாரிப் பேட்டை, பாரி நகர், டாக்டர் முனுசாமி நகர், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம்.
ஆகையால், மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், முன்னெச்சரிக்கையாக, நாளை மின்சாரம் மூலம் செய்யக்கூடிய முக்கிய வேலைகளை காலை 9 மணிக்குள் செய்து முடித்துக் கொள்ளுங்கள்.
Also Read: டெல்லி குளிரால் 476 உயிரிழப்பு: தலைமைச் செயலாளர், காவல் ஆணையருக்கு நோட்டீஸ்