Coimbatore Power Shutdown: கோவையில் பல்வேறு பகுதிகளில் நாளை புதன்கிழமை (20.08.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

Continues below advertisement

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?

பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை,  மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

Continues below advertisement

நாளை எங்கெல்லாம் மின்  தடை?

கீரநத்தம்

கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், வின்

கே.ஜி.சாவடி

சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்

மின் தடை முன்னெச்சரிக்கைகள் 

பராமரிப்புக்காக திட்டமிடப்பட்ட மின் தடைக்கு முன்னதாக, சிரமத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படுவதற்கு முன்பு மக்கள் தங்கள் மொபைல் போன்கள், பவர் பேங்குகள் மற்றும் பிற அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து வைத்திருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் மின்சார பம்புகள் செயல்படாமல் இருக்கும் என்பதால், வீடுகளில் போதுமான குடிநீர் மற்றும் வீட்டு நீரை சேமித்து வைக்குமாறும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

மின்சாரம் சீரமைக்கப்படும்போது எந்த சேதத்தையும் தவிர்க்க மின் சாதனங்களை அணைக்குமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்தனர். மெழுகுவர்த்திகள், டார்ச்ச்கள் அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேவையான இடங்களில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளை குளிர்விப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவும் அவர்கள் பரிந்துரைத்தனர். சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, மின் தடை நேரத்தின் போது  லிஃப்ட் பயன்படுத்த வேண்டாம் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிடவும், மின்சாரம் மீண்டும் தொடங்கும் வரை ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.