பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் மற்றும் அதற்கு எதிராக கருத்து பதிவிட்ட தடா ஜெ ரஹீம் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜீன் சம்பத். இவர் இந்து மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், இதன் காரணமாக காவல் துறையினர் இவர் மீது நடவடிக்கை எடுத்து வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை அர்ஜீன் சம்பத் வெளியிட்டுள்ளார். அதில், “அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள், இந்துக்களின் வெற்றித் திருநாள். அயோத்தில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டிட சபதமேற்போம்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.



இந்நிலையில் அர்ஜீன் சம்பத்தின் டிவிட்டர் பதிவு இரு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக, பந்தய சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரேம் சுகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பந்தய சாலை காவல் துறையினர் அர்ஜீன் சம்பத் மீது  இரு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல், இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதேபோல இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்தின் டிவிட்டர் பதிவிற்கு எதிராக கருத்து பதிவிட்ட இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த தடா ஜெ ரஹீம் மீது பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தடா ஜெ ரஹீம் தனது டிவிட்டர் பக்கத்தில் அர்ஜீன் சம்பத் கருத்திற்கு எதிராக இரு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக, பந்தய சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரேம் சுகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பந்தய சாலை காவல் துறையினர் தடா ஜெ ரஹீம் மீது  இரு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல், இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண