Coimbatore Power Shutdown: கோவையில், மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முனனரே சரி செய்யப்படும். 

கோவையில் மின்தடை: 07-06-2025

இந்நிலையில், கோயம்பத்தூரில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதனால், கோவையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை இல்லை:

 வழக்கமாக திங்கள் முதல் சனி வரை மின் தடை செய்யப்படுவது வழக்கம், ஆனால் நாளை ஜூன்7 பக்ரீத் பண்டிகை என்பதால் விடுமுறை தினமாகும் இதனால் நாளை 7ஆம் தேதி கோவை மாவட்டத்தில் மின் தடை  செய்யப்படுவது குறித்தான தகவல் வெளியாகவில்லை.

பராமரிப்பு பணிகள்:

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம்.

மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நாளை ஜூன் 6ஆம் தேதி கோவையில் மின்தடை செய்யப்படுவது குறித்தான தகவல் வெளியாகவில்லை.