கோவை ஆனைகட்டி பகுதியில் உள்ள ரிசார்ட்டில், மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக 10 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டது. இந்த துவக்க விழா நிகழ்வு நடைபெற்றது. நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன், வாடிக்கையாளர்கள் மத்தியில் வாகனங்களை பலூன் பறக்க விட்டு துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 87 விதமான பொருட்கள் விற்பனை செய்து வருகின்றோம். தமிழகத்தை 9 மண்டலமாக பிரித்து செயல் பட்டு வருவதாக தெரிவித்தார்.


கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தம், அரசியல் கட்சிகள் என்னை வளர விடக்கூடாது என நினைக்கலாம். நான் ஏதோ தவறு செய்வதாக நினைக்கலாம் எனக் கூறிய அவர், ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதை உண்மையில் தெரியாமலேயே விமர்சிக்கின்றனர் என கூறினார். பொதுவாக தொழிலில் நெருக்கடி இருக்கிறது, சில அரசியல் கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றனர் எனவும், வளர்ச்சியை தடுப்பதற்கான முயற்சியில் இருக்கின்றனர் நாங்கள் அதிலிருந்து வெளியே வருவோம் என தெரிவித்தார். V3 online tv  நிறுவனத்தில் நான் முதலில் வேலை செய்துள்ளேன். இடையில் நோய்த்தொற்று காலத்தில் ஒரு சில தடங்கல்கள் இருந்தது. அதனைத் தொடர்ந்து தான் நான் my v3 ads என்ற நிறுவனத்தை  தொடங்கியதாகவும், ஆன்லைன் டிவி மற்றும்  my v3 ads நிறுவனங்களுடன் முடிச்சு போட்டு காழ்புணர்ச்சியுடன், பொறாமை காரணமாக இந்த பிரச்சினையை திசை திருப்பதாகவும் தெரிவித்தார். ஏமாந்ததாக சொன்னவர்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாக புகார் அளிக்காமல் இருக்கின்றனர் என கேள்வி எழுப்பினார்.


யூனிசெப் டாக்டர் பட்டம் கொடுத்து இருப்பது வழக்கமான ஒன்றுதான், யூனிசெப்  நம்பரை ஆராய்ந்து பார்த்து கொள்ளட்டும் என தெரிவித்த அவர், டாக்டர் பட்டம் பெற்று நாங்கள்  என்ன ஊசியா போடுகிறோம் அது ஒரு கௌரவம்  மட்டுமே என தெரிவித்தார். மாத்திரை  தயாரிப்பு நிறுவன உரிமையாளர் என்ன படித்தார் என தெரியவில்லை, கம்பெனி ஓனருக்கு என்ன படிப்பு அவசியம் எனவும் தெரிவித்தார். நிறுவனத்ததின் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகளை சொன்னார்கள். அதை தவிடு பொடியாக்கிவிட்டதால் வேறுவிதமான வதந்திகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். நான் தொழில் முனைவோர், என் நோக்கம் தொழில் மட்டுமே என தெரிவித்தார் . அரசியல்வாதிகள், அரசாங்கம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல தயாராக இருக்கின்றேன் எனவும், ஆனால் நேரடியாக கட்சிப் பெயரை சொல்லி என்னை தொந்தரவு செய்யாதீர்கள் எனவும் தெரிவித்தார். நெருக்கடிகள் தொடர்ந்தால்,  நிர்பந்தங்கள் தொடர்ந்தால், இதெல்லாம் பண்ணினால் தான் பாதுகாப்பு என்று தெரிந்தால், அடுத்து என்ன நடக்கும் என தெரியாது எனவும் தெரிவித்தார்.