கோவை அவிநாசி மேம்பாலத்தில் 20 மெட்ரிக் டன் எல்பிஜி 3 ஏற்றிச் சென்ற டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எரிவாயு கசி ஏற்பட்ட நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டேங்கர் லாரி விபத்து:
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை கணபதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்துக்கு சொந்தமான எல்பிஜி பாட்டில் ஆலைக்கு 18 டன் எல்பிஜி ஏற்றிக்கொண்டு டேங்கர் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் அவினாசி மேம்பாலத்தில் சென்ற போது டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் மீடகப்பட்டார்.
வாயு கசிவு:
லாரி கவிழ்ந்தவுடன் டேங்கரில் இருந்து எரிவாயு கசிந்தால், அருகில் உள்ள மக்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம். இதில் உள்ள ஆபத்தை உணர்ந்த அதிகாரிகள்,மேம்பாலத்தை மூடிவிட்டு, வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்பிவைத்தனர்.
வெளியேற்றப்பட்ட மக்கள்:
மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து 1 கிமீ சுற்றளவில் உள்ள மக்களையும் அதிகாரிகல் வெளியேற்றியுள்ளனர். மேம்பாலத்தில் மின்கம்பிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி டேங்கரை பாதுகாப்பாக அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
மேலும், குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக சுற்றுவட்டாரத்தில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் "நள்ளிரவு 3 மணிக்கு மேல் இந்தச் சம்பவம் நடந்தது. 18 மெட்ரிக் டன் எல்பிஜி ஏற்றிச் சென்ற டேங்கர் கவிழ்ந்ததுள்ள்து. கசிவு சரி செய்யப்பட்டு, வாகனம் வந்து சரி செய்ய காத்திருக்கிறோம். இணைப்புத் தகடு முடிந்ததும், வாகனத்தை மீண்டும் நிமிர்ந்து திருப்ப முடியும்... .மேலும் போக்குவரத்தும் தடைச்செய்யப்பட்டுள்ளது, பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்திருந்தார்
தூக்கிநிறுத்தப்பட்ட டேங்கர்:
இந்த நிலையில் எட்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூன்று கிரேன்களின் உதவியுடன் டேங்கர் லாரியானது தூக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.டேங்கரை தூக்கி நிறுத்துவதற்கு முன்பாக தீயணைப்பு துறையினர் அந்த இடம் முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர். இதன் பிறகே மிகுந்த கவனமுடன் டேங்கரானது தூக்கி நிறுத்தப்பட்டது.