கோவை கவுண்டம் பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பல்லி விழுந்த மத்திய உணவை சாப்பிட்ட  40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தில் ஊழியர்கள் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்

Continues below advertisement

40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் கவுண்டம் பாளையம் மாநகராட்சி பள்ளியில் வழக்கம் போல் மதிய உணவு சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மாணாக்கர்களுக்கு வாந்தி, மயக்கம் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். 

சத்துணவு அலட்சியம்

Continues below advertisement

இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் , மாநகராட்சி பள்ளி முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.  அப்பொழுது மாணவ - மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இருந்தது கிடப்பதை பார்த்தனர். பல்லி விழுந்ததை கவனிக்காமல் உணவை சத்துணவு ஊழியர்கள் பரிமாறியதால் அதை சாப்பிட்ட மாணவ - மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து ,மதிய உணவு தயாரிப்பில் அஜாக்கிரதையாக இருந்த சத்துணவு அமைப்பாளர் கவுசல்யா, சமையலர் மனோகரி, சமையல் உதவியாளர் ஜெயா கமலம் ஆகிய மூன்று பேரையும் இடமாற்றம் செய்து சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். 

மேலும், வேறு பள்ளியை சேர்ந்த ஊழியர்களை கவுண்டம் பாளையம் மாநகராட்சி பள்ளியில் பணி அமர்த்தப்பட்டு தங்கு தடையின்றி மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்க சிவகுரு பிரபாகரன் ஏற்பாடு செய்தார்.