கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும்,பிரபலநகைக்கடையானஜோஸ்ஆலுக்காஸ்நிறுவனத்தின்கிளை, கோவைகாந்திபுரம்நூறடிசாலையில்இயங்கிவருகிறது. பலஆண்டுகளாகஇயங்கிவரும்இந்தகடைக்கு, தினமும்ஏராளமானவாடிக்கையாளர்கள்வந்துசெல்வதுவழக்கம். இந்தநிலையில்கடந்த27-ஆம்தேதியன்றுஇரவுஊழியர்கள்பணிமுடித்து, வழக்கம்போலகடையைமூடிவிட்டுசென்றுள்ளனர். பின்னர் காலையில்வழக்கம்போலகடைஊழியர்கள்வந்துகடையைதிறந்தபோது, தங்கநகைகள், வைரம்உள்ளிட்டவைகொள்ளையடிக்கப்பட்டுஇருப்பதுதெரியவந்தது. சிசிடிவிகேமராகாட்சிகளைஆய்வுசெய்தபோது, கடையின்ஏசி வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்த பகுதிவழியாகஉள்ளேநுழைந்தஅடையாளம் தெரியாதநபர் ஒருவர், கடையில்இருந்தநகைகளைகொள்ளையடித்துச் சென்றதுதெரியவந்தது.

மேலும்கடைக்குள் உள்ளே நுழைந்த நபர் கண்காணிப்பு கேமரா முன்பு சட்டையில் முகத்தை மறைத்த மாதிரி சென்றதும், அவரதுநடவடிக்கைகள்வித்தியாசமாகஇருந்ததும்தெரியவந்தது. இதுகுறித்துதகவல்அறிந்துவந்தரத்தினபுரிகாவல்துறையினர்வழக்குப்பதிவுசெய்துவிசாரணைமேற்கொண்டுவருகின்றனர்.

ஜோஸ்ஆலுக்காஸ்நகைக்கடைமற்றும்அப்பகுதியில்பொருத்தப்பட்டுஇருந்தசிசிடிவிகண்காணிப்புகேமராகாட்சிகளைகைப்பற்றியகாவல்துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 2 கிலோ தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. புலன் விசாரணையில் 4 கிலோ 600 கிராம் தங்க நகைகள், வைரம், பிளாட்டிணம், 700 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தருமபுரியை சேர்ந்த விஜய் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டதும், அவர் ஆனைமலை பகுதியில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் விஜயை பிடிக்க ஆனைமலை பிடிக்க சென்றபோது, வேறொரு வழக்கில் கைது செய்ய தருமபுரி காவல் துறையினரும் வந்துள்ளனர். அப்போது வீட்டின் கூரையை பிரித்து கொண்டு விஜய் தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து விஜய்யின் மனைவி நர்மதாவை கைது செய்த காவல் துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கொள்ளையடிக்க திட்டமிடவும், நகைகளை மறைத்து வைக்கவும், தப்பி செல்லவும் உதவிய நர்மதா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தற்போது 3 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நகைகளை மறைத்து வைத்திருந்த தர்மபுரியை சேர்ந்த விஜயின் மாமியார் யோகராணி என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரது வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ தங்கம், வைரம், பிளாட்டிணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் இவ்வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட 95 சதவீத நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே விஜய்யின் தந்தை முனிரத்தினம் தற்கொலை செய்து கொண்டார். தருமபுரி வனப்பகுதியில் பதுங்கியிருந்த விஜயை காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் விஜய் சென்னையில் இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சென்னை சென்ர காவல் துறையினர் சபரி மலைக்கு மாலை அணிந்தபடி, தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை வழக்கில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், அக்கடையில் கொள்ளையடிக்க கடை ஊழியர்கள் உதவினார்களா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.