“இனிமேல் தமிழ்நாட்டில் ஒரு பெண் மீது கை வைத்தால், கை இருக்காது” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆவேசமாக கூறியுள்ளார்.

Continues below advertisement

கோவையில் விமான நிலையம் பகுதியில் ஒரு காரில் ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் மூன்று பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள், ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று வலுக்காட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. மறுநாள் இதுதொடர்பான செய்திகள் வெளியே வந்ததை அடுத்து, தமிழ்நாடே அதிர்ச்சிக்குள்ளானது.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கோவையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பாஜக பெண் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Continues below advertisement

போராட்டத்தின்போது தமிழிசை செளந்தரராஜனிடன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் ஆவேசமாக பதிலளித்தார்.

பொள்ளாச்சியை போல கோவையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. இரண்டு ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள நடைபெற்றுள்ளதால், தொடர்ச்சியாக இரண்டு ஆட்சியிலும் காவல்துறை சரியில்லையா? என்ற கேள்விக்கு

ஆட்சியை பற்றியை தற்போது தனக்கு கவலையில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதே கவலையாக இருக்கிறது. இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். யார் அந்த சார்? என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். தற்போது யார் அந்த சார்கள் என கேட்கவேண்டியுள்ளது. குற்றவாளிகள் திமுக ஆதரவில் இருப்பதால், காவல்துறையால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஏதாவது சார் கூட தொடர்பில் இருந்தால் என்ன செய்வது?. அப்பா, அப்பா என்று சொல்கிறீர்கள் அப்பா பாதுகாப்பு கொடுக்க வேண்டாமா?. அப்பாவே கண்டுகொள்ளாமல் இருப்பதால், மற்றவர்கள் நமக்கு என்ன என்று சென்றுவிடுகிறார்கள். இதன் காரணமாக கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். ஏற்கெனவே, நான் கூறியதுபோல, பெண்களே ஆயுதத்தை எடுக்க வேண்டிய காலம் தமிழ்நாட்டில் வந்துள்ளது என்பதை நான் நினைக்கிறேன்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றத்திற்கு அரசு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு

உதவி எண் சரியாக வேலை செய்யவில்லை. காவலன் செயலி எந்தளவிற்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த செயலியை பிரபலப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம். அந்த செயலியில் உதவி கேட்பதற்குள் பெண்களை தூக்கிக் கொண்டு சென்றுவிடுகிறார்களே. இனிமேல் தமிழ்நாட்டில் ஒரு பெண் மீது கை வைத்தால், கை இருக்காது. பெண் குழந்தைகளை பெற்ற அம்மாக்கள் சும்மா விட்டுட்டு இருப்பார்களா?. தமிழ்நாடு மிகமிக மோசமான சூழ்நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது