கோவை காந்திபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தூசி இருந்ததால் குடிமகன் அதிர்ச்சியடைந்தார்.


கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9வது வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மாநகரின் மையப் பகுதியில் உள்ளதால், இங்கு மது விற்பனை மிகவும் ஜோராக நடக்கும். மாநகர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் பணி புரிவோர், கட்டிட தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், கடைகளில் பணி புரியும் தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இங்கு மது வாங்கி விட்டு அருகில் உள்ள பாரில் மது அருந்துவார்கள். இதன் காரணமாக இந்த கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.


இந்நிலையில் கோவை பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (38) என்பவர், இக்கடையில்  பீர் ஒன்றை வாங்கி உள்ளார். நண்பர்களுடன் அருகில் உள்ள பாருக்கு சென்று அந்த பீர் பாட்டிலை பார்த்த போது, அதில் மிகவும் சிறிய அளவிலான தூசிகள் மிதந்து உள்ளன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. பீர் மற்றும் மதுபான பாட்டில்களில் அடிக்கடி தூசி, பல்லி, குப்பை உள்ளிட்டவை இருந்து வருவது குடிகாரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண