கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் அத்யாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ் சமீரன் தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,"கொரோனா பெருந்தொற்று நோயினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்பொழுது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற தோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகனை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட காவல் ஆணையர் மற்றும் பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (31.07.2021) ஆலோசனை நடைபெற்றது.
தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கட கட்டுப்பாடுகள் நாளை 02.08.2021 முதல் விதிக்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
கோயம்புத்தார் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி அலை, காந்திபுரம் 5,6,7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, எ.பீ.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பபு, தூடியலூர் சந்திப்பு, ஆகிய நெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம் காய்கறி கடைகள் தவிர மற்று கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் 5 மணி வரை அமர்ந்து 50 சதவீதவாடிக்கையாளர்ளுடன் அனுமதிக்கப்படுகிறது. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் (Whole Sale Market) மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி, சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை மற்றும் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவனைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் சோதனைச் சாவடிகளிலேயே Random RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.