கோவை பேங்க் ஆப் பரோடா வங்கியில் கிழிந்த மற்றும் பழைய நோட்டுகள் சுமார் மூன்று கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


கோவையில் டாக்டர் நஞ்சப்பா சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இருந்து கடந்த ஜனவரி 3 ம் தேதி 70 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிழிந்த மற்றும் அழுக்கான 2000, 500, 200, 100 ரூபாய் பணத் தாள்களை ஆர்.பி.ஐ.க்கு அனுப்பி உள்ளனர். அப்போது ஆர்பிஐ 2 கோடியே 83 லட்சத்து  49 ஆயிரத்து 800 ரூபாய் குறைவாக உள்ளது என பேங்க ஆப் பரோடா வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.




இந்த சம்பவம் குறித்து  கடந்த ஜனவரி 8 ஆம் தேதி கோவை மண்டல அலுவலகத்தில் இருந்து நஞ்சப்பா சாலையில் உள்ள வங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கூடுதலாக 45 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் குறைவாக உள்ளதை கண்டறிந்தனர். மொத்தமாக 3 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது வங்கியில் பணியாற்றும் அதிகாரிகளே மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதனையடுத்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பேங்க் ஆப் பரோடா மண்டல அதிகாரி காகடை சிபிஐக்கு மோசடி தொடர்பாக  புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில் வங்கி ஊழியரக்ளான செல்வராஜன், ராஜன், ஜெய்சங்கர், கனகராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் விஜயலட்சுமி ஆகிய 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 




சிபிஐ அதிகாரிகள் நஞ்சப்பாசாலையில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் காவலாளியான கனகராஜ் மோசடிக்கு உடந்தையாக இருந்தத்தும் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி அதிகாரிகளே கிழிந்த நோட்டு விவகாரத்தில் மொத்தம் 3 கோடியே 28 லட்சத்து 69  ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண