கோவை சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். இவர் ட்விட்டர் சமூக வலைதளத்தில் உமா கார்க்கி 26 என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாகவும் திமுக தலைவர் கருணாநிதி, பெரியார், முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்தும் டிவிட்டரில் அவதூறு கருத்துகளை உமா கார்க்கி என்பவர் பரப்பி வருவதாக திமுகவை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட .டி.விங்க் ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் உமா கார்க்கியை கடந்த 20ம் தேதியன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக சார்பில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் மற்றும் சமூக ஊடக செயல் வீரர்கள் சந்திப்பு கூட்டம் கட்சித் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உமா கார்க்கிக்கு சிறந்த ஊடக செயல்பாட்டாளர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கி பாராட்டியிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கிய சில மணி நேரங்களிலேயே உமா கார்க்கி கைது செய்யப்பட்டார்.


சைபர் கிரைம் காவல் துறையினரால் உமா கார்த்திகேயன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள், கோவை சைபர் கிரைம் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது உமாவிற்கு அண்ணாமலை விருது கொடுத்ததை தாங்க முடியாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து இருப்பதாகவும், இவ்வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் பாஜகவினர் தெரிவித்தனர். உமா கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த திமுகவினரும் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலில் உமா கார்கி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, உமா கார்கியை கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக சென்னை எழும்புர் சைபர் க்ரைம் காவல் நிலையத்திலும் உமா மீது பதியப்பட்ட வழக்கில், உமா கார்கியை சென்னை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் கோவை சிறையில் இருந்து அழைத்து சென்ற காவல் துறையினர் சென்னை சிறையில் அடைத்தனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண