’கமலஹாசனின் நிலைப்பாடு கவலையளிக்கிறது’ - அண்ணாமலை கருத்து

”நிர்பந்தம் காரணமாக மீண்டும் திமுகவிற்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை கமலஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது. கமலஹாசன் திமுக உடைய நிலைப்பாட்டில்தான் செல்ல வேண்டும் என்பது கவலை அளிக்கிறது”

Continues below advertisement

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மூத்த நடிகர் தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை மாற்ற வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார். கமலஹாசன் மறுபடியும் திமுக பக்கத்தில் இணைந்துள்ளார். அரசியல் என்பது கடினமான வேலை, கொள்கை அரசியல் என்பது ஒரு கடினமான வேலை. அவர் எங்கே செல்ல வேண்டும் என்பது கமலஹாசனின் முடிவு. இத்தனை ஆண்டு காலமாக இருந்த அவர்களின் தொண்டர்கள் ஒரு மாற்றம் யாருக்கும் சாராமல் ஒரு மையமாக இருக்கும் என எண்ணினார்கள். திமுக என்ற தீய சக்திகளின் ஆதிக்கம் இருக்கின்றது. கமலஹாசன் தன்னை நம்பி வந்தவர்களும் ஒரு மாற்றம் கொடுக்க வேண்டும் என்பதை ஆரம்பித்தார். மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறவர்கள் ஒரே ஒரு கட்சி பாஜக தான். தமிழகத்தில் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என பாஜக களம் இறங்கியுள்ளது.

Continues below advertisement

அவருக்கு இருக்கக்கூடிய நிர்பந்தம் காரணமாக மீண்டும் திமுகவிற்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை கமலஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது. இது எப்போதோ நடந்திருக்க வேண்டும். இப்போது  நடந்துள்ளது. கமலஹாசன் திமுக உடைய நிலைப்பாட்டில் தான் செல்ல வேண்டும் என்பது கவலை அளிக்கிறது. நடிகர்கள் வாய் திறந்தால் எப்படி படத்தை ரிலீஸ் பண்றது? தமிழகத்தில் இன்றைக்கு நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை திரும்பக் கேட்கிறேன். அவர்கள் சமூக ஆர்வலர்களாக இருக்கிறார்களா? சாமானியவர்களா? ரோட்டில் மக்கள் பிரச்சனை பார்க்கின்றவர்களா? எதற்கு எடுத்தாலும் நடிகர்கள் தான் பேசணும் எனபதில் இருந்து வெளியே வரவேண்டும். அவர்கள் ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு நடிகர்களின் நிலைமை அரசியல் சார்பாக உள்ளது. இன்று சமுதாயத்தில் யார் பணி செய்கிறார்களோ, அவர்களுக்கு குரல் அளிக்க வேண்டும் என்பதையும் தான் மக்கள் எதிர்பார்ப்பு. இந்தியாவில் இருக்கக்கூடிய பல தலைவர்கள் அரசியலுக்கு வந்தார்கள் இதற்கு கமலஹாசன் சிறந்த உதாரணம். அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்யக்கூடிய ஒரு பணி. நடிகர்களை விட்டு விடுங்கள். டெக் பார்க் அமைப்பதற்கு எத்தனையோ இடங்கள் உள்ளது. திமுக ஆட்சி புதிதாக டெக் பார்க் போடுறாங்கள் என்றால், பக்கத்தில் அவர்கள் நிலம் வாங்கி இருப்பார்கள். திமுக ஆட்சியில் வளர்ச்சி என்பது கேள்விக்குறி.

தேர்தல் ஆணையர் என் பதவி விலகினார் என அவர்கிட்ட தான் கேட்க வேண்டும். தெரியாதா யூகங்களுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்?அவருக்கு நான் மாமனும் இல்லை, மச்சானும் இல்லை. தெரிந்திருந்தால் போன் செய்து சொல்லி இருப்பார். அரசியலுக்கு வந்திருப்பது மக்கள் பணி செய்வதற்கு தான். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு தான்.  2026 முக்கியமான தேர்தல். தமிழகத்தில் சாக்கடையை சுத்த செய்ய வேண்டும். பாராளுமன்றத்தில் யார் இருப்பது என்பது கட்சி முடிவு செய்ய வேண்டும். கோயம்புத்தூரில் வளர்ச்சி குறைந்துள்ளது இன்றைக்கு இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினருக்கு விஷயம் கிடையாது. தேர்தலுக்கு நாங்கள் இப்போதே தயாராகி விட்டோம். தேர்தலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு சரித்திர தேர்தலாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

நாங்களும் பத்திரிக்கையாளர் மீது கோபத்தில் தான் இருக்கின்றோம். எங்கள் கட்சி 25 சதவீதத்திற்கு மேல் உள்ளதை 18 சதவீதம் என்று போடுகிறார்கள். கனிமொழி அடையாளம் என்பது அவரது அப்பா கருணாநிதிதான். அவர் பாஜக அங்கொன்று இங்கொன்று உள்ளது என சொல்கிறார். இன்றைக்கு 303 எம்.பி.க்கள் உள்ளனர். கனிமொழிக்கு அதே பாடத்தை சொல்கிறேன், அப்பா பெயரை வைத்து ஓட்டு வாங்குங்கள். மையம் எல்லாம் இல்லை எல்லாத்தையும் எல்லாத்துடைய கலவையாக இருப்பது பாஜகவின் கட்சி. கூட்டணி கட்சிகள் இருக்கக்கூடிய மாநிலத்திலிருந்து பாஜகவின் லிஸ்ட் கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருப்பூர், கோவையில் வளர்ச்சி பிரச்சனை உள்ளது. நீலகிரியில் டீ பிரச்சனையாக உள்ளது. இங்கே இருக்கக்கூடிய எம்பிக்கள் நான்கு வழி சாலை வேண்டாம் என்கிறார்கள். இப்படி இருந்தால் வளர்ச்சி அடைய முடியாது” எனத் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola