பசுமை தாயகம் சார்பில் நடைபெறும் "நொய்யல் ஆற்றை மீட்டு எடுப்போம்" என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, ”பசுமை தாயகம் சார்பில் நொய்யலாற்றை மீட்டு எடுப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதன் நோக்கம் நொய்யலை மீட்டு எடுக்க வேண்டும். இது முதற்கட்ட முயற்சி. அனைவரும் ஒன்றினைந்து செயல்பட்டு நொய்யலை மீட்டு எடுக்க வேண்டும்.


நொய்யல் நலம் பெறட்டும், கொங்கு வளம் பெறட்டும், சேர, சோழ, பாண்டிய மண்னர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நொய்யலை பாதுகாத்தனர். 32 அணை, குளம் மற்றும் ஏரிகளை உருவாக்கி இந்த பகுதியில் வளர்ச்சிக்கான திட்டத்தை வகுத்தனர். நொய்யலாற்றில் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் பெற்றி வந்தது. குடிநீர் விவசாயம் என அனைத்தும் நொய்யலாற்றை நம்பி இருந்தது ஆனால், 40 ஆண்டுகாலமாக திடக்கழிவு, ரசாயன கழிவு, சாயக்கழிவுகள், சாக்கடை கழிவு, மணல் கொள்ளை, செங்கல் சூளை மணல் கொள்ளை, போன்ற செயல்களாலும் ஆக்கிரமிப்புகளாலும் பாதிக்கபட்டுள்ளது. எனவே கண்டிப்பாக இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும். 


பாமக மற்றும் பசுமை தாயகமும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மக்களை ஒன்றினைத்து நொய்யலை மீட்டு எடுப்பேன் என்ற நம்பிக்கையில் இங்கு வந்துள்ளேன். இது ஒரு கூட்டு முயற்சி அரசு, பொதுமக்கள், அனைத்து தரப்பட்ட மக்களும் இனைந்து செயல்பட வேண்டும். கூவத்தை சுத்தம் செய்ய மாறி மாறி ஆண்ட கட்சிகள் 4000 கோடி முதலீடு செய்துள்ளனர். ஆனால் கூவம் கூவமாக தான் இருக்கிறது. எந்த மாற்றமும் இல்லை. இதனை நாம் விஞ்ஞான ரீதியில் அணுக வேண்டும். 


நொய்யல் உருவெடுத்து 180 கிமீ கடந்து காவிரியில் கலக்கிறது. குடிக்கும் நிலையில் இருக்கும் நொய்யலாறு கோவையிலிருந்து கெடுகின்ற சூழல் உள்ளது. அரசு சில நூறு கோடிகளை ஒதுக்கினால் போதாது ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்ய வேண்டும். நொய்யல் உற்பத்தியாகும் மலை பகுதியில் உள்ள காடுகளை மீட்டு எடுக்க வேண்டும். காடுகளை அழித்துவிட்டனர். பல்வேறு கழிவுகள் நொய்யலுக்கு தான் செல்கிறது. சுத்திகரிப்பு என்பதே இல்லாமல் திருப்பூரில் தான் அதிகளவில் மாசடைகிறது. உலகில் பல நாடுகளில் பல்வேரு நதிகளை மீட்டு எடுத்துள்ளனர். அரசியல் நோக்கம் பாராமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நமக்கு இனிவரும் காலங்களில் மிகப்பெரிய சவாலாக உள்ளது பருவ நிலை மாற்றமே. அதனை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். 


ஆளுநரும் ஆளும் கட்சியும் இணைந்து தமிழக முன்னேற்றத்திற்கு செயல்பட வேண்டும். ஆளுனர் அரசியல் செய்யக்கூடாது. தமிழக அரசும் ஆளுனரை மதிக்க வேண்டும். ஆளுனர் அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர். வேறு விதமான அரசியலில் ஆளுனர் ஈடுபட கூடாது. பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில் தமிழ்நாடா? தமிழகமா? திராவிடமா? திராவிட நாடா?  மத்திய அரசா? ஒன்றிய அரசா? இது போன்ற செயல்களில் ஆளுனர் ஈடுபட கூடாது. குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தில் காரணமாக வாரம் ஒரு நபர் தற்கொலை, அவர்களது குடும்பம் நிற்கதியில் நிற்கின்றனர் ஆனால் ஆளுநர் கையெழுத்து போடாமல் காலதாமதமிட்டு வருகிறார். அது ஏன் என்று தெரியவில்லை. தேசிய கீதத்தில் திராவிடம் வரும் நிலையில் திராவிடம் என்ற வார்த்தையை ஆளுனர் பாடாமல் விட்டு விடுவாரா? திராவிடத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இருந்தாலும் நான் பாடித்தான் ஆகவேண்டும். இது ஒரு டைவர்சன் டாக்டிகஸ்.


தமிழ்நாட்டில் பல்வேறு மக்கள் பிரச்சனை உள்ளது, விவசாய பிரச்சனை, மழை வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை. கரும்பு 5 மற்றும் 6 அடி கரும்பு கொள்முதல் பிரச்சனை உள்ளது. நெய்வேலி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தை கையகபடுத்தி நிலக்கரி சுரங்கம் அமைக்க என்.எல்.சி நிருவனம் துடிக்கிறது. அதற்கு தமிழக அரசும் துணைபோகிறது என குற்றம் சாட்டினார். இவற்றை விடுத்து இதனை ஒருபிரச்சனையாக அடித்துகொள்வது தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல. சட்டமன்ற மரபு என்பது உள்ள நிலையில் நாட்டுப்பண் பாடும் முன்னரே ஆளுனர் வெளிநடப்பு செய்தது என்பதும், மரபுக்கு மீறிய செயலே என்றார். இந்த பிரச்சனை இனிமேல் தொடரக்கூடாது. யாருடன் கூட்டணி இருந்தாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதனை தைரியமாக கூறும் ஒரே கட்சி பாமக தான். முதல்வருக்கும் ஆளுனருக்கும் இருக்கும் பிரச்சினையை விட நொய்யலை மீட்க வேண்டிமென்பது மிகப்பெரிய பிரச்சனை” என்றார். கூட்டணி குறித்த கேள்விக்கு, ”2026ல் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு” எனப் பதிலளித்தார்.