கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூர் பகுதியில் தனியார்  நகைக் கடை திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பிகில் பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கடையை திறந்து வைத்தார். மேலும் நகைக் கடையின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”தற்போது ஹனுமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை உள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. கோவைக்கு நான் சிறுவயதிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். கல்லூரி படிக்கும் போது பலமுறை கோவை வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் வரும் போதும் புது அனுபவமாக உள்ளது. எனக்கு கோவை உணவு என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை வரும் போதும் கோவை உணவை ருசிப்பதில் ஆர்வமாக இருப்பேன். நேற்று வந்த போது ஒரு இனிப்பு வகை சாப்பிட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது” எனத் தெரிவித்தார்.




இதேபோல கோவை கணுவாய் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பிரபல நடிகையும், பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் நம்மை விட்டு பிரிந்தது மீளாத் துயரம். தற்போது ஒ.டி.டி. தளங்களில் வெப் தொடர்களில் நடித்து வருகிறேன். வெப் தொடர்கள் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வளர்ந்து வரும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைவருக்கும்  வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக இருக்கிறது” என தெரிவித்தார். ரீமேக் படங்கள் குறித்த கேள்விக்கு, மலையாளத்தில் இருந்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில்  ரீமேக் செய்யும் படங்கள் வெற்றி பெறுவது திரைப்பட துறைக்கு ஆரோக்கியமே எனவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா நம்பீசன் அவர் பாடிய பைவ்,பைவ் என்ற பாடலை  மேடையில் பாடி அசத்தினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண