கோவை கணபதி வினாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவை குணா (54). இவர் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி கோவை மக்களிடையே பிரபலமானவர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி குரலில் மேடைகளில் பேசி வந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்துள்ளார். குறிப்பாக மிமிக்ரி கலைஞரான இவர் பிரபல தொலைக்காட்சிகளில் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு மூலம் மக்களிடம் நன்கு அறிமுகமானவர். தொடர்ந்து சின்னத்திரை, ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார். சென்னை காதல் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.


இவரது மனைவி பெயர் ஜூலி. இவரின் இரண்டு மகள்களுக்கு திருமணமான நிலையில் மனைவியுடன் கோவையில் வசித்து வந்தார். ஜனவரி மாதம் வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு, டயலாசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக் கிழமை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் குணா உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கோவை குணாவின் இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்கள் பல குரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




கோவை விளாங்குருச்சி பகுதியில் உள்ள கோவை குணாவின் இல்லத்தில், அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கபட்டது. அவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள் பல குரல் கலைஞர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து அவரது உடல் ஆம்புலன்சில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மேடை கலைஞர்கள் பாட்டு பாடி - கைதட்டி கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண