கோவையில் 7 வயது சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை எனக்கூறி, தாயின் இரண்டாவது கணவர் காலில் சூடு வைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம். இவரது மனைவி சர்மதா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இதனிடையே திருப்பூரைச் சேர்ந்த முசாதிக் என்பவர் ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்து தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது முசாதிக்கிற்கும் சர்மதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து சர்மதா முதல் கணவரை பிரிந்து, முசாதிக்கை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வசித்து வருகிறன்றனர்.

சர்மதாவின் 7 வயது மகன் அவருடனே வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15ம் தேதியன்று அந்த சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை எனக் கூறி, முசாதிக் தோசை கரண்டியால் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது மகனைப் பார்க்க வந்த சர்மாதாவின் முதல் கணவர் இப்ராஹிம் மகனின் காலில் இருந்த காயத்தை பார்த்து இது குறித்து மகனிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுவன் முசாதிக் தனது காலில் சூடு வைத்து விட்டதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் தனது மகனுடன்  கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று முசாதீக் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண