தமிழ்நாடு முழுவதும் 44 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளது அரசு. 


தமிழக அரசு கோவை, நெல்லை மாவட்டத்தின் மாநகர காவல் ஆணையர்களையும் நியமித்துள்ளது. கரூர், மதுரை, திண்டுக்கல், திருவாரூர், ராமநாதபுரம். திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளர்.


தமிழக காவல்துறையில் அதிகாரிகளின் பணிக்காலம் முடிந்ததையெடுத்து பலரும் கடந்த சில நாட்களாகவே பணி ஓய்வு பெற்று வருகின்றனர். இதனால் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தது.  இந்தச் சூழலில் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்நிலையில் தமிழ்நாடு போலீஸ் அகடாமியில் ஐபிஸ் அதிகாரியாக இருந்த அமல்ராஜ் தற்போது தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி இரண்டு நாட்களுக்கு முன்பு ஓய்வுபெற்றதையடுத்து புதிய ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.


Vikram Box Office : நாயகன் மீண்டும் வரான்.. உலகளவில் இத்தனை கோடி வசூலா?.. தெறிக்கவிடும் ரசிகர்கள்..


தாம்பரம் காவல் ஆணையர்:


மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறை சென்னை, தாம்பரம், ஆவடி என 3 காவல் ஆணையரகமாக பிரிக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம் காவல் ஆணையரகம் சோழிங்கநல்லூரிலும், ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் ஆவடி சிறப்புக் காவல்படை 2-ம் அணி வளாகத்திலும் செயல்படுகிறது. தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் 20 காவல் நிலையங்களுடனும், ஆவடி காவல் ஆணையர் அலுவலகம் 25 காவல் நிலையங்களுடன் தற்போது செயல்பட்டு வருகிறது.


தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி,  தாம்பரம் காவல் ஆணையராக  அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழியும், கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.


திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமாரும், காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐ.ஜி.,யாகவும், கரூர் எஸ்.பி.,யாக சுந்தரவதனம், திருவண்ணாமலை எஸ்.பி.,யாக கார்த்திகேயன், மதுரை எஸ்.பி.,யாக சிவபிரசாத், திண்டுக்கல் எஸ்.பி.,யாக பாஸ்கரன், திருவாரூர், எஸ்.பி.,யாக சுரேஷ்குமார், திருவள்ளூர் எஸ்.பி.,யாக பகேர்லா செபாஸ் கல்யாண், மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக வருண்குமார், ராமநாதபுரம் எஸ்.பி.,யாக தங்கராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.




 


Semester Exams: பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதிகள்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்புமேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண