கோவை அவினாசி சாலையில் உள்ள டாக்டர் ஜி.ஆர்.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கட்டுநர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில் “மரம் காப்போம் – மண் காப்போம்” என்ற நோக்கில், சுமார் 30 ஆண்டுகள் பழமையான 3 பெரிய மரங்கள் இடமாற்றம் செய்து மறு நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Continues below advertisement

30 ஆண்டுகள் பழமையான மரங்கள் இடமாற்றம்

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆலமர குடும்பத்தைச் சார்ந்த ஒரு மரம் மற்றும் 2 வேப்பமரங்கள் பாதுகாப்பாக அகற்றி, புதிய இடத்திற்கு மாற்றி நடவு செய்யப்பட்டது. மர வேர்களுக்கு சேதம் ஏற்படாமல் கயிறுகள் கட்டி நிபுணத்துவ முறையில் கவனமாக நகர்த்தப்பட்டன. ஒவ்வொரு மரத்தையும் மறு நடவு செய்ய சுமார் 40 முதல் 50 நிமிடங்கள் வரை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மர வேர்களில் உள்ள நுண்ணுயிர்களை பாதுகாக்க 3 முதல் 4 மணி நேரத்திற்குள் நடவு பணிகள் முடிக்கப்பட்டன.

Continues below advertisement

மரங்கள் செழித்து வளர ‘ஜீவாமிர்தம்’ எனப்படும் இயற்கை உரக்கலவை பயன்படுத்தப்பட்டது. இதில் பசு சாணம், கோ-சிறுநீரகம், நாட்டுச் சர்க்கரை, வெல்லம் மற்றும் வரப்பு மண் சேர்த்து, ஒரு வாரத்திற்கு முன்பே தயார் செய்து வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.