காதலியை தேடி சென்ற வாலிபருக்கு கத்தி முத்து

Continues below advertisement


சென்னை ஆர்.கே.நகர் 6 வது தெருவைச் சேர்ந்தவர் பாபு ( வயது 28 ) இவர். தண்டையார்பேட்டை வ.உ.சி.நகரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வருகிறார். அப்பெண்ணை பார்ப்பதற்காக, வ.உ.சி.நகர் 8வது தெரு வழியாக நடந்து சென்ற போது அங்கு வந்த ஐந்து பேர் கும்பல் பாபுவை வழிமறித்து எதற்காக எங்கள் பகுதி பெண்ணை காதலிக்கிறாய் எனக் கேட்டு கத்தியால் குத்தியும் கல்லால் தாக்கியும் தப்பியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு , மருத்துவமனையில் சேர்த்தனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட தண்டையார் பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் ( வயது 32 ) சூர்யா ( வயது 26 ) முருகவேல் ( வயது 30 ) சாந்தகுமார் ( வயது 36 ) ரிச்சர்ட் ஹட்லி ( வயது 34 ) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


" தந்தை மீது பாசம் " தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை


சென்னை மதுரவாயல் எம்.எம். டி.ஏ., காலனி, ஏழாவது பிளாக் பகுதியைச் சேர்ந்வர் மேனகாஸ்ரீ ( வயது 43 ) இவரது கணவர் கடந்த 2022 அக்டோபர் மாதம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு பிளஸ் 1 படிக்கும் ஜெயபிரதாப், ( வயது 16 ) என்ற மகனும் , ஒரு மகளும் உள்ளனர். மேனகாஸ்ரீ , அவரது பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளியிலேயே ஊழியராக பணிபுரிகிறார்.


இந்த நிலையில் வழக்கம் போல் தன் மகளை ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். சைக்கிளில் பள்ளிக்கு வரவேண்டிய மகன், நாள் முழுதும் வராமல் இருந்துள்ளார். மாலை வீட்டிற்கு சென்று பார்த்த போது , கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.


அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது , மகன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் மதுரவாயல் போலீசார் உடலை பிரேத பரிசோத கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


முதல்கட்ட விசாரணையில், தந்தையின் மீது அதிக பாசம் கொண்ட ஜெயபிரதாப் , அதே சோகத்திலேயே இருந்துள்ளார். சமீபத்தில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'இட்லி கடை' படத்தை பார்த்து விட்டு, தந்தை காட்சிகளால் மேலும் சோகமாக இருந்ததாக தெரிகிறது. அதிலிருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. திருவொற்றியூரில் பரபரப்பு


சென்னை திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தை சேர்ந்தவர் தேசப்பன் ( வயது 59 ) தி.மு.க.பிரமுகர். அதிகாலையில் கடலுக்கு மீன்பிடிக்க அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில் , அவரது வீட்டின் வாயில் அருகே பயங்கர சத்தம் கேட்டுள்ளது.


பதறிய தேசப்பன் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது , பைக்கில் வந்த இருவர் குவார்ட்டர் மதுபான பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி , தீ வைத்து வீசிவிட்டு தப்பியது தெரிய வந்தது.


இதுகுறித்து , தேசப்பன் திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து , அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து , பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.


மது குடிக்க பணம் கேட்டு தந்தையின் மண்டையை உடைத்த மகன்


சென்னை திருமங்கலம் , பெரியார் தெரு, பாடி குப்பத்தை சேர்ந்தவர் மாணிக்கம் ( வயது 65 ) கூலி தொழிலாளி. இவரது மகன் சுந்தர் ( வயது 27 ) பழைய குற்றவாளி. குடி பழக்கத்திற்கு அடிமையான சுந்தர் , இருதினங்களுக்கு முன் , தந்தை மாணிக்கத்திடம், மது அருந்த பணம் கேட்டுள்ளார். தந்தை பணம் தர மறுத்ததால் செங்கலால் தாக்கியுள்ளார்.  பலத்த காயமடைந்த மாணிக்கம் , கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமங்கலம் போலீசார் சுந்தரை கைது செய்தனர்.