காதல் திருமணம் செய்து ஒரு மாதத்தில் இளைஞர் தற்கொலை

Continues below advertisement

சென்னை மேற்கு தாம்பரம் திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் ஜபித் டைட்டஸ் ( வயது 25 ) இவர் மாதவரத்தை சேர்ந்த ரெபேக்கா ( வயது 27 ) என்பவரை காதலித்து ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தில் ரெபேக்காவின் பெற்றோருக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

ரெபேக்கா ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சேர்ந்தவர். இரு தினங்களுக்கு முன் ரெபேக்கா தன் பெற்றோரை சமாதானப்படுத்தி விட்டு வருவதாக கூறி மாதவரத்திற்கு சென்றார். போதையில் இருந்த ஜபித் டைட்டஸ், 'உன்னை மிஸ் செய்கிறேன்' என மனைவியிடம் மொபைல் போனில் கூறியுள்ளார்.

Continues below advertisement

சிறிது நேரத்தில் அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. இதில் சந்தேகப்பட்டு, ரெபேக்காவும் அவரது பெற்றோரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது ஜபித் டைட்டஸ் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மது போதையில் துாங்கிய நபரிடம் செயின் பறித்த 3 பேர் கைது

சென்னை திருமங்கலம் காந்தி நகர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( வயது 42 ) தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 13 - ம் தேதி இரவு நண்பருடன் மது அருந்தி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துாங்கியுள்ளார். எழுந்து பார்த்த போது, அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை, பெண் உட்பட நான்கு பேர் திருட முயன்றது தெரிய வந்தது.

சுதாரித்த ஸ்ரீதர், மொபைல் போனை இறுக பிடித்த போது, அவரது கழுத்தில் இருந்த 1 சவரன் செயினை பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக் ( வயது 19 ) புழல் காவாங்கரையைச் சேர்ந்த பிரகாஷ் ( வயது 19 ) விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் ( வயது 19 ) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட பெண்ணை தேடி வருகின்றனர்.

பீர் பாட்டிலால் போக்குவரத்து போலீசாரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னைாநுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர், லயோலா கல்லுாரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியாக வந்த கார் நிறுத்தப்பட்டிருந்த லோடு வாகனத்தின் மீது மோதியது. இதில் லோடு வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் காரில் வந்த மூன்று வாலிபர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதை பார்த்த தலைமைக் காவலர் சென்ற போது காரில் வந்தவர்கள் போலீசாரை தாக்கி பீர் பாட்டிலால் குத்த முயற்சித்தனர். அவர்களை பொது மக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். நுங்கம்பாக்கம் போலீசாரின் விசாரணையில் சூளைமேடைச் சேர்ந்த அருண்குமார் ( வயது 28 ) அனீஷ் ( வயது 28 ) கன்னியாகுமரியை சேர்ந்த லட்சுமணன் ( வயது 30 ) என்பது தெரிய வந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.