செங்கல்பட்டு வேதாச்சலம் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி ஜெய் மதிபாலா. இவருடைய பெற்றோர் பாலா மற்றும் ஜெயப்பிரதா. இவர் செங்கல்பட்டு அருகே உள்ள நத்தம் பகுதியை சேர்ந்தவர். பத்து வயதே நிரம்பிய செய்மதி பாலாவிற்கு சிறுவயதிலிருந்தே தண்ணீரை சேமிக்க வைக்க வேண்டும் என ஆர்வத்தை பெற்றோர்கள் அறிவுரை கூறி வந்துள்ளனர்.
இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவி ஜெய் மதிபாலா தண்ணீரை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் சைக்கிளில் தண்ணீரை கொண்டு வந்து பள்ளியில் இருந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றினார்.
காலையிலேயே செங்கல்பட்டு அடுத்த உள்ள புலிப்பாக்கம் பகுதியில் இருக்கும் கொளவாய் ஏரியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் தண்ணீரைக் கொண்டுவந்து மரத்திற்கு நீரை ஊற்றினார். தண்ணீரை பாதுகாக்கவேண்டும் தண்ணீரை வீணடிக்கக் கூடாது என்ற வாசகம் ஏந்திய பதாகைகளை சைக்கிளில் வரும்போது ஏந்தி வந்தார். உனக்காக செங்கல்பட்டு நகர் காவல் நிலையம் அருகே மாணவி சைக்கிளில் வந்த பொழுது காவல்துறையினர் மாணவிக்கு, காவல்துறையினர் மலர் கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்தனர். மாணவியின் இந்த செயலை பள்ளி தலமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர் . சைக்கிளில் பயணம் செய்த மாணவிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் 4 கிலோ மீட்டருக்கும் பாதுகாப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது
உலக தண்ணீர் தினம்
1993-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 22-ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடித்தான் வருகிறோமே தவிர, தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்றுவரை காணப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் எந்த வகையிலும் அகலவில்லை. நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.
நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது.உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்