உலக நீரிழிவு தினம்

Continues below advertisement

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், உலக நீரிழிவு தினம் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நீரிழிவு சம்பந்தமாக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார். தொடர்ந்து நீரிழிவு நோய்க்கான வழிக்காட்டு புத்தகத்தையும் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் ;

Continues below advertisement

நீரிழிவு தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தான் குழந்தைகள் தினமாகவும், குழந்தைகளை நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கும் நாளாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடை கோடி மனிதனுக்கும் மருத்துவ சேவை தேவை என்ற எண்ணத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நோய்கள் கட்டுக்குள் உள்ளது

தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் மூலம் இரண்டரை கோடி பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில், 58 லட்சம் பேர் புதிதாக நீரிழிவு நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் நிலை நீரிழிவு சிகிச்சை தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது. மேலும் தொற்று நோய்களிலும் மிகச் சிறப்பாக செயலாற்றி நோய்களை கட்டுக்குள் வைத்துள்ளோம்.

நீரிழிவு நோய் என்னை பெரிதாக பாதிக்கவில்லை

கடந்த 30 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் நானும் பாதிக்கப்பட்டிருந்தேன். இது நோய் அல்ல, ஒரு பழக்கம். தினந்தோறும் அதிகாலை எழுந்து பத்து கிலோ மீட்டர் மேல் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். சுமார் 25 ஆண்டுகளாக நடைப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். 30 ஆண்டுகளாக இருந்த நீரிழிவு நோய் என்னை பெரிதளவு பாதிக்கவில்லை.

கர்ப்பிணிகளுக்கான நீரிழிவு சிகிச்சை முறை

கர்ப்பிணிகளுக்கான நீரிழிவு சிகிச்சை முறை ஒரு வாரத்தில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் தொடங்க உள்ளோம். எட்டாவது வாரத்தில் நீரிழிவு பரிசோதனை செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள ஏழு மருத்துவக் கல்லூரிகளில் குழந்தைகளுக்கான முதல் நிலை நீரிழி நோய்க்கான சிகிச்சை முறைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மூன்று மருத்துவ கல்லூரிகளில் முதல் நிலை நீரிழிவு நோய்க்கான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன. தொடர்ந்து பிற மாவட்ட மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.