உள்ளாடைகள் திருட்டு

Continues below advertisement

பெங்களூரின் ஹெப்பகோடியில் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழையும் நபர் பெண்களின் உள்ளாடைகளை திருடுவதும் , அதனை அணிந்து செல்போனில் வீடியோ எடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வந்துள்ளது.

சிசிடிவியில் காட்சிகள் பதிவு

Continues below advertisement

இந்த நபரின் இந்த செயல் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. இது தொடர்பாக போலீசார் தாமாகவே முன் வந்து வழக்குப் பதிவு செய்தனர். அதன் பிறகு சிசிடிவி கேமராவில் பதிவான நபரின் உருவத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்தால் போதை

இந்த விசாரணையின் போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது கைதான நபரின் பெயர் அமுல் (வயது 23). கேரளாவை சேர்ந்த இவர் பெங்களூர் ஹேப்பகோடியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அவருக்கு பெண்களின் உள்ளாடைகளை திருடி அணியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. பெண்களின் உள்ளாடையை அணிந்தால் தனக்கு ஒரு விதமான போதை ஏற்படுவதை உணர்வதாகவும், இதனால் தொடர்ந்து அதனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ வைரல்

இதனால் அவர் இரவு நேரங்களில் வீட்டின் பால்கனி மற்றும் முற்றத்தில் உலர வைக்கப்பட்டு இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து பெண்களின் உள்ளாடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அந்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக ஹெப்பகோடி போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 303 (2) (திருட்டு), 329 (4) (வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்), 79 (வார்த்தை, சைகை அல்லது அத்துமீறி நுழைந்து அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கர்நாடகாவில் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 25 வயது நிரம்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், மாணவிகளின் உள்ளாடைகளை திருடிய வழக்கில் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர் பல வீடுகளில் பெண்களின் உள்ளாடைகளை திருடியது தெரிய வந்தது. மேலும் அவர் ஆபாச படம் பார்ப்பதற்கு அடிமையாகி இருப்பதும் தெரிய வந்தது. அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.