மெரினா கடற்கரை - விமான படையினர் சாகசம்



இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்வையிட லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர். லட்சக்கணக்கான மக்கள் திரண்டதில் பல பேருக்கு வாந்தி , மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.




இந்த நிகழ்ச்சி பிற்பகல் ஒரு மணிக்கு முடிவுக்கு வந்த போது , கடற்கரையில் குவிந்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றனர். இதனால், அந்த பகுதியில் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெரினாவை ஒட்டியுள்ள காமராஜர் சாலைக்கு இணையாகச் செல்லும் அண்ணா சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 


இந்நிலையில் , தமிழிசை சவுந்தராஜன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் ,


குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம்.



நிகழ்ச்சி முன்னேற்பாடு  குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன் ?


நடிகர் திரு.விஜய் கட்சியின் மாநாட்டிற்கு 21 கேள்விகள்,விநாயர் சதுர்த்தி ஊர்வலம் , கோயம்பேட்டில் நடக்கவிருந்த பாஜகவின் மாநாடு அதே போல் ஆண்டாண்டு நடக்கும் 
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள் , எங்கே கார் நிறுத்தம் , எங்கே பேருந்து நிறுத்தம், எங்கே உணவு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,


எங்கே மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் , இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி, எத்தனை மருத்துவர்கள்,எத்தனை செவிலியர்கள் , எத்தனை உதவியாளர்கள் என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கும் தமிழக அரசு.


நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன் ?


கார் ரேசுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளே முன் நின்று கவனித்த இன்றைய துணை முதலமைச்சர் தேசத்தின் பெருமையை பரைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன?


மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன் ?


என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.