சென்னையில் நேற்று விமான படை சாகசத்தை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இது குறித்து சென்னை மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.


மேயர் பிரியா சொல்லும் காரணம் என்ன ?


5 பேர் உயிரிழந்ததற்கு காரணம் வெயிலின் தாக்கம்-தான் என்றும் அரசும் சென்னை மாநகராட்சியும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்ததாகவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டுள்ள பிரியா, விமான படை சாசகம் முடியும் வரை தான் அங்கு இருந்து பணிகளை முடுக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த விமான படை சாசகம் நடைபெற்றது உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம். வெயிலின் தாக்கத்தால் சிலர் மயங்கினார்கள். அந்த பகுதியில் தான் மாலை 4 மணி வரை இருந்தேன். அனைத்து பகுதிகளிலும் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள், உடனுக்குடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். கடற்கரையில் விமான பாதுகாப்பு துறை சொன்ன அனைத்து விஷயங்களையும் செய்துக் கொடுத்தோம். ஆனால், வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பொதுமக்கள் சிலர் மயக்கம் அடைந்தார்கள். அவர்களுக்கு தண்ணீர் வழங்க டேங் அமைக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.


15 லட்சம் பேர் வந்தார்கள் – சென்னை மேயர் பிரியா


ஒரு மணி உச்சி வெயிலை பலரால் தாக்க முடியவில்லை. அது தான் அவர்கள் உடல் நலமற்று போக காரணம். 15 லட்சம் பேருக்கு மேல் விமான சாகசத்தை பார்க்க வந்ததால் இப்படியான பிரச்னை ஏற்பட்டுள்ளது.