செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் குப்பம் கிராமத்தில் நேற்று மீன் பிடிப்பதற்காக இந்திரகுமார் 40; மாயகிருஷ்ணன் 55; கர்ணன் 35; கடலுக்கு சென்றுள்ளனர். மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் விடப்பட்டிருந்த வலையில் 35.6 கிலோ எடையுள்ள ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ் நீர் சிக்கியது.
இதை அறிந்த மீனவர்கள் உடனடியாக கரைக்கு வந்து மீன்வளத்துறை காவல்துறை அச்சிறுப்பாக்கம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் 35.6 கிலோ ஆம்பர் கிரிசை மீனவர்கள் ஒப்படைத்தனர். இன்று மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற அதே பகுதியைச் சார்ந்த சேகர் 40; வலையிலும் 3 கிலோ எடையுடைய ஆம்பர் கிரீஸ் சிக்கியது. அச்சரப்பாக்கம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
திமிங்கலத்தின் உமிழ் நீரான ஆம்பர் கிரீஸ், உயர்ரக வாசனை திரவியங்கள் மற்றும் விலை உயர்ந்த மதுபானங்களில், வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது. சில மருந்துகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.சர்வதேச சந்தையில் 1 கிலோ எடையுள்ள ஆம்பர் கிரீஸ், 1 முதல் 1.50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், 'கடல் தங்கம்' எனவும் அழைக்கப்படுகிறது. பல கோடி மதிப்பிலான திமிலத்தின் உமிழ்நீர் ஒப்படைக்கப்பட்டதால் கிராம மக்கள் நிகழ்ச்சி அணிந்துள்ளனர் மேலும் இதுபோன்று கடல்களில் கிடைக்கக்கூடிய அரிய வகை பொருட்களை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திலும் ஒப்படைத்து வருகிறோம் எனவே தங்களுக்கு அரசு சார்பில் ஊக்குவிக்கும் விதமாக எங்கள் கிராமத்திற்கு சன்மானம் வழங்கினால் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என தெரிவிக்கின்றனர்.
ஆம்பர் கிரீஸ் என்றால் என்ன?
திமிங்கலங்கள், உணவு சாப்பிட்ட பின் ஜீரண சக்திக்காக ஒரு விதமான மெழுகு போன்ற திரவத்தை வாந்தி மூலம் வெளியேற்றும். திமிங்கலங்கள் வெளியேற்றும் கழிவுகளுக்கு அம்பர் கிரீஸ் என்று பெயர். கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது உருண்டை வடிவம் பெற்று கடற்கரையில் அம்பர்கிரீஸ் ஒதுங்குகின்றன. சில சமயங்களில், கடலிலும் இந்த பொருள் கிடைக்கின்றது. விலை உயர்ந்த வாசனை திரவியம் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கு அவை பயன்படுவதால் ஒரு கிலோ அம்பர் கிரீஸ் அதன் நிறத்துக்கேற்ப பல லட்சம் ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விலைபோகிறது. அரசு திமிங்கிலத்தின் அம்பர் கிரீசை சேகரிப்பதற்கு தடை விதித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்