தமிழ்நாடு வனத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்டரங்களில் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்  துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். குறிப்பாக காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களை அதிகளவில்  சேதப்படுத்தி வருவதால் அதனை சுட்டுக் கொன்று பிடிக்க வேண்டுமென்று காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் அமைச்சரிடம்  கோரிக்கை  விடுத்தனர்.




அதனைதொடர்ந்து  இக்கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேசுகையில்,


விவசாய நிலங்களில் தொல்லைக்கொடுக்கும் காட்டு பன்றிகள் குறித்து வனத்துறையிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால் விவசாய நிலங்களில் தொல்லைக் கொடுக்கும் நாட்டு பன்றிகளை விவசாயிகளே பிடித்து வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடலாம், என்ன வேண்டுமென்றாலும் செய்துக்கொள்ளலாம், எந்த நடவடிக்கையை வேண்டுமென்றாலும் கையாளலாம், அதற்கு எவ்வித அனுமதியும் பெற தேவையில்லை என்று விவசாயிகள் மத்தியில் கலகலப்பாக பேசினார்.


மேலும் சென்று ஆட்சி காலத்தில் காட்டு பன்றிகள் தொல்லையால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் போய் இருக்கலாம், ஆனால் தற்போதுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் வனத்துறை மூலம்  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும், உங்களுக்கு உரிய இழப்பீடு வரவில்லை என்றால் வனத்துறையின் அமைச்சாரான  என்னிடம் நேரடியாக நீங்கள் தொடர்புக் கொண்டு நேரடியாக புகார் தெரிவிக்கலாம், தகவல் அளிக்கலாம், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தனது செல்போன் எண்ணான 9443566666 ஐ அனைத்து விவசாயிகளும் குறித்துக்கொள்ளுங்கள்  என தனது செல்போன்  எண்னை அமைச்சர் தெரிவித்து பேசினார்.




அதன் பின்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பருவ கால பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் உள்ளிட்ட  பல்வேறு நலதிட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் ராமசந்திரன் ஆகியோர் வழங்கினர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவிக்கையில்,


தமிழ்நாட்டில் வனப்பரப்பை ஆண்டு தோறும் அதிகரித்து வரவேண்டும், வனப்பரப்பை 33 % அதிகரித்து முதலமைச்சரின் கனவை நினைவாக்கும் வகையில் வனத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது, அதற்கு விவசாயிகளின் ஆதரவு தேவை, இந்தியாவிலேயே சிறந்த துறையாக வனத்துறை மாறும் என்பதில்லை எந்தவித ஐய்யப்பாடுமில்லை, அதற்காக பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம். 2022-23 ஆண்டுகளில் 2 கோடியே 50 லட்சம் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும், அடுத்த அடுத்த வரும் காலங்களில் ஆண்டுக்கு 32 கோடி மரங்கள் என திட்டமிடப்பட்டு 2030 ஆண்டுக்குள் 261 கோடி மரங்கள் நடப்பட்டு  தற்போது உள்ள வனப் பரப்பளவான  24% இருந்து 33% மாக வனப் பரப்பளவாக  மாறும் என தெரிவித்தார்.


அதன் பின் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் எடமச்சி மலைகளில் உரிய அனுமதியில்லாமல் கல்குவாரி செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அவ்வாறு தவறு ஏதேனும் செய்திருந்தால் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பதிலளித்தார்.


மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில்,


ஒகேனக்கல் வனப்பகுதியில் சமூகவிரோதிகள் சென்று யானையை சுட்டு கொண்டுள்ளனர். அதில் ஒருவரை கண்டுபிடித்து கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 நபர்களை தேடி வருகின்றனர். அவர்களை பிடித்து அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாதாரணமாகா காட்டில் வாழும் சிங்கத்தின் வயது 23 ஆண்டு காலம் மட்டுமே வண்டலூரில் உயிரிழந்த சிங்கம் வயது 33 ஆகையால் வனப்பகுதியில் வாழும் உயிரினங்கள் ஆயுள் காலங்களை விட பூங்காவில் உள்ள உயிரினங்கள் ஆயுள் அதிகம், அங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும், பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது அதற்கு உதாரணமாக நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக நாங்கள் மாற்றியுள்ளோம், நாட்டு பன்றிகளை விவசாயிகளே என்னவேண்டுமானலும் செய்துக்கொள்ளலாம். ஆனால் காட்டுப் பன்றி என்றால் அண்டை மாநிலமான கேராளவில் எந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அதே போல காட்டுப் பன்றியை கட்டுப்படுத்துகின்ற  உரிய நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும் என தெரிவித்தார்.




இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தமிழக முதன்மை வனக்காப்பாளர் சையத் முஜ்புல் அப்பாஸ், காஞ்சிபுரம் மாவட்ட வனக்காப்பாளர் ரவி மீனா,காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம்,எம்.எல்.ஏக்கள்,உள்ளிட்ட உள்ளாட்சி  பிரதிநிதிகள் ,துறைச் சார்ந்த அலுவலர்கள்,விவசாயிகள் பயனாளிகள் என பலர் கலந்துக் கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண