உண்மையான உரிமையாளரா ?

Continues below advertisement

பொதுவாக வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது, அதை தற்போது வைத்திருப்பவர் உண்மையான உரிமையாளரா என்பதை சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, அந்த நபருக்கு சம்பந்தப்பட்ட சொத்து எப்போது , என்ன வழியில் வந்தது என்பதை விசாரித்து அறிய வேண்டும்.

உண்மை தன்மை சரிபார்ப்பது அவசியம்

Continues below advertisement

இதில் ஒரு நபர் சுயமாக சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்தை , சுய நினைவுடன் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். அந்த சொத்து மீது அவர் வேறு எந்த கடனும் , ஒப்பந்த ஆவணங்களும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டால் போதும். ஆனால், பொது அதிகார முகவர், பரம்பரை சொத்தின் வாரிசு ஆகிய நபர்களிடம் இருந்து சொத்து விற்பனைக்கு வருவது அதிகரித்துள்ளது.

என்ன பிரச்சனை வந்து விட போகிறது ?

சட்டப்படி இவர்களுக்கு சொத்தை விற்பதற்கான முழு உரிமை இருந்தாலும், அதில் உண்மை தன்மையை சரி பார்க்க வேண்டியது அவசியம். ஆனால், சில இடங்களில் பாகப் பிரிவினை வாயிலாக சொத்து பெற்றவர் அதை விற்கும் நிலையில், வாங்கும் நபர்கள் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்தின் அசல் உரிமையாளர் இறந்த நிலையில் அவரது வாரிசுகள் அந்த சொத்துக்கு உரிய நபர்கள் தானே அதில் என்ன பிரச்னை வந்துவிட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். இதில் சில விஷயங்களை மிக நுட்பமாக பார்த்தால் மட்டுமே உண்மை நிலவரத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக, ஒரு நபர் இறந்த நிலையில், அவரது மூன்று வாரிசுகள். உரிய சான்றிதழ் பெற்று, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதன் அடிப்படையில் அவர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் நடந்து விடுகிறது. இந்த பட்டா கூட்டு பட்டா என்ற அடிப்படையில் இருக்கும் நிலையில் யாருக்கு எந்த பாகம் என்பது சொத்து வாங்க வரும் நபருக்கு புரியாது என்பதால் இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இது போன்ற நிலையில், சொத்து பெற்ற வாரிசுகள் தங்களுக்கான பங்கு அளவு என்ன என்பதை தெளிவு படுத்தாமல் விற்பனைக்கு செல்ல கூடாது. மூன்று வாரிசுகள் இருந்தால், அந்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே ஒரு வாரிசு விற்க முடியும் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

விற்பனைக்கு பின் சொத்து பிரச்சனையை தவிர்க்க 

இதை கவனிக்காமல், அந்த சொத்து முழுவதையும் அல்லது பகுதியை வாங்கினால், பிற வாரிசுகள் அந்த பத்திரத்தில் கையெழுத்து போடுவது கட்டாயம். இவ்வாறு பிற வாரிசுகள் கையெழுத்து இன்றி நீங்கள் சொத்து வாங்கினால், பிற்காலத்தில் சட்ட ரீதியாக பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பாகப் பிரிவினை நடந்த சொத்து வாங்கும் போது, அனைத்து வாரிசுகளும் ஒருமித்து கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் விற்பனைக்கு பின் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் பதிவுத்துறை அலுவலர்கள்.