திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் நேரத்தில் பள்ளி சீருடையில் ஓடி வந்த ஒரு மாணவி ரயில் கூடவே ஓடி வருகிறார், ரயில் நகரும் மாணவி வேகமாக  ரயிலில் ஏறியதோடு காலை நடை மேடையில் வைத்து உரசியபடி செல்லும் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

பொதுவாக பணிக்க பனிக்கட்டியில் சேட்டிங் செய்வதே நாம் பார்த்திருப்போம். நம்மூரில் ஸ்கேட்டிங் செய்வதை பார்க்க வேண்டுமென்றால், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் செல்லும் பயணிகள் சில இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ரயில்வே பிளாட்பாரமில் மீட்டிங் செய்வதை பார்க்க முடியும். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் மாணவி ரயிலை பிடித்தபடி ஆபத்தான முறையில் ஒருவர் ஸ்கேட்டிங் செய்து செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 



கல்லூரி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் இதுபோன்று ரயில் நிலையத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது வெளியாகி கண்டனத்தைப் பெற்று வரும் நிலையில், பள்ளி மாணவி மற்றும் மாணவர் இணைந்து ஸ்கேட்டிங் செய்த வீடியோ கண்டனத்தை பெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடாதவாறு ரயில்வே நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.