காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள்.  ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், செல்போன் மற்றும் லேப்டாப் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.


இவ்வாறு அதிகளவு தொழிற்சாலைகள் இப்பகுதியில் இருப்பதால் அருகில் இருக்கும் மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவு ஆண்கள் மற்றும் பெண்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். பல தொழிற்சாலைகள், தங்களுடைய ஊழியர்களை தங்கள் சொந்த விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து அங்கு உணவுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவது உண்டு. இதற்காக ஊழியர்களிடம் குறிப்பிட்ட தொகையை அந்த தொழிற்சாலை மாதம்தோறும் தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்து பிடித்துக்கொள்ளும், இந்த நடைமுறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.


பூந்தமல்லி சாலையில் ஜமீன் கொரட்டூரில் தனியாா் கப்பல் கட்டும் பொறியாளா் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, ஸ்ரீ பெரும்புதூா் தனியாா் கைப்பேசி உதிரிபாக தொழிற்சாலையில் 2,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த புதன்கிழமை மதியம் உணவு உட்கொண்டபோது, சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பூந்தமல்லி தனியாா் மருத்துவமனை, சுற்று வட்டாரங்களில் உள்ள மருத்துவமனைகளில் 175-க்கும் மேற்பட்ட பெண் ஊழியா்கள் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நள்ளிரவு பணிக்கு வந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 11 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்றும் நீடித்ததால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம், அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து 16 மணிநேரமாக நடந்து வந்த போராட்டத்தை பெண் தொழிலாளர்கள் வாபஸ் பெற்றனர். போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. ஃபாக்ஸ்கான் தலைமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தரமற்ற உணவு வழங்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மன உளைச்சலடைந்த தொழிலாளர்களுக்கு ஒருவாரத்திற்கு விடுப்புடன் ஊதியம் வழங்கப்படும் என்றார்.






 பல இடங்களில் போராட்டம்


















சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடத் தொடங்கினர். புளியம்பாக்கம், வடகால், சுங்குவார்சத்திரம் என பல்வேறு இடங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் மறியலில் ஈடுபட்டதால் அங்குப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. முக்கிய நெடுஞ்சாலை என்பதால் சாலையில் இரண்டு புறமும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நின்றது.


தொடர்ந்து ஒரகடம் பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்தது. சுங்கசதிரம் பகுதியில் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெற்றாலும், அந்த பகுதியில் இருந்த ஒரகடம் பகுதியிலிருந்த போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் சூழலை கட்டுக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு உடன்படாத 60 ஆண்கள் மற்றும் 60 பெண்கள் மட்டும் 20 ஆண்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்