இந்துக்களின் முக்கியப்பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காகப் பல வகையான சிலைகள் தயாரிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடப் பல்வேறு இந்து அமைப்புகள் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் பூஜை நடத்தப்படும். அதன்பிறகு சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும்.




 


குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவின் பொழுது பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி சிலை வைக்க அனுமதி கொடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த ஆண்டு கொரோனா தொற்று நெறிமுறை தளர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 31 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி கொடுக்கப்படும் குளங்களில் மட்டுமே விநாயகர் சிலை கரைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


காஞ்சிபுரத்தில்...


காஞ்சிபுரம் சிவகாஞ்சி நிலையம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயல்முறை ஆணை என்ற பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தற்பொழுது பேசும் பொருளாகியுள்ளது. அந்த உத்தரவில்,"காஞ்சிபுரம் மாவட்டம் பி ஒன் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் வருகின்ற 31- 08-2022 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இருப்பதாலும், 02- 09- 2022 மற்றும் 04-09-2022 ஆகிய தேதிகளில் சிலைகள் கரைக்கப்பட உள்ளதால் செங்கழுநீரோடை வீதி மற்றும் சங்கர மடம் அருகிலுள்ள இறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடைகளை மேற்கண்ட தினங்களில் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டி மேற்கண்ட இரு தினங்களுக்கு தங்களது கடையை மூடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என  இடம்பெற்றுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்ட செயல்முறை ஆணை, அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடை உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது இதுகுறித்து ஆதரித்தும், எதிர்த்தும் சமூக வலைதளத்தில் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.


11ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்களை சந்தித்த அஜித்... மும்பை டூ திருச்சி நடந்தது என்ன?