விழுப்புரத்தில் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் உயிரிழப்பு:
விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 47). இவர் விழுப்புரம் ஏ.டி.எல். நகரில் கடந்த ஒரு வருடமாக, ஒரு வாடகை வீட்டில் தனியாக தங்கியிருந்து விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கு முதுநிலை கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
திடீரென மயக்கம்:
இவர் நீண்ட நாட்களாக முதுகு தண்டுவடம் பிரச்சினை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் செல்வம், கொழுப்பு சத்துள்ள உணவை சாப்பிட்டதாக தெரிகிறது. பின்னர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு அதே இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதில் அவரது முன்பக்க தலையில் காயம் ஏற்பட்டு அங்கேயே இறந்து விட்டார்.
உதவி தலைமை ஆசிரியர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
இவர் இரண்டு தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர். உடனே இதுகுறித்து அவர்கள், வேலூரில் உள்ள செல்வத்தின் குடும்பத்தினருக்கும், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செல்வத்தின் குடும்பத்தினர் விழுப்புரத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் செல்வத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து செல்வத்தின் மனைவி விஜய்ஆனந்தி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்