தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் வேகத்தில் நகர்ந்தது கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 22 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தென்கிழக்கு வங்க கடலின் கிழக்கே 640 கி.மீ, திருகோணமலை (இலங்கை), யாழ்ப்பாணத்திலிருந்து (இலங்கை) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 780 கி.மீ தொலைவில், காரைக்காலில் இருந்து கிழக்கே 840 கி.மீ- தென்கிழக்கே, சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 900 கி.மீ. தொலைவிலும் நில கொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதன் தீவிரம் மேலும் படிப்படியாக இன்று மாலை புயலாக மாறி வடக்கே தென்மேற்கு வங்க கடலை அடைய வாய்ப்பு உள்ளது. அதன் பின் தமிழ்நாடு-புதுச்சேரி அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் கடற்கரையை டிசம்பர் 8ஆம் தேதி காலை அடையும்.
அதனை தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரியை நோக்கி நகரும்
அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரப் கடற்கரையை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
மேலும், கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் டிசம்பர் 8 அன்று பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
டிசம்பர் 9 ஆம் தேதி வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திரப் இடங்களில் மிகக் கனமழை மற்றும் வட உள் தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள ராயலசீமா பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
டிசம்பர் 10 ஆம் தேதி வட தமிழ்நாடு மற்றும் ராயலசீமா மற்றும் தெற்கு ஆந்திரப் உள்ளிட்ட இடங்களில் கனமழை முதல் மிக கனமழையுடன் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்; ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.