நடிகை கஸ்தூரி மீது புகார்
இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கும் நோக்கில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடிகை கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த வீரலட்சுமி
தமிழகத்தில் தமிழர்களுக்கும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் மோதலை உருவாக்கும் வகையிலும் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கிட வேண்டும் வகையில் நடிகை கஸ்தூரி பேசி வருகிறார்.
தமிழர்களிடையே சண்டையை மூட்டி விட்டு, பொது அமைதியை கெடுக்கும் வகையில் வன்முறை பேருக்கும் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார். பல மாதங்களுக்கு முன்பாக தெலுங்கு மொழி பேசுகின்ற அருந்ததிய மக்களை இழிவு படுத்தி பேசினார். அது சம்பந்தமாக காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தது.
கஸ்தூரி இப்போது ஆயம்மாகி விட்டார்
அமைதிப்படை திரைப்படத்தில் கஸ்தூரி தாயம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது பேசியிருந்தால் எடுபட்டிருக்கும். ஆனால் இப்போது கஸ்தூரி ஆயம்மாகி விட்டார். இப்போது பேசினால் கருத்துக்கள் எடுபடாது. தன்னை தமிழச்சி என்று கூறி வருகிறார்.
சீமான் - கஸ்தூரி இருவரும் CLASS MATE ஆ , GLASS MATE ஆ ?
சீமானும் கஸ்தூரியும் ஒரே கருத்துக்களை கூறி வருகிறார்கள். அவர்கள் CLASS MATE ஆ அல்லது GLASS MATE ஆ எனக் தெரியவில்லை. சினிமாவில் அவுத்து போட்டு ஆடும் அவருக்கு திடீரென தமிழ் மீது பாசம் வந்தது எதனால் ?
அவர் முதலில் தமிழரா புகுந்த வீடு தான் அதுவும் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலுங்கு மொழி பேசும் மக்கள் மீது அவர் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தார் .