வண்டலூர் உயிரியல் பூங்கா

 

சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சுற்றுலா தலமாக, அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து , நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம். 

 


வண்டலூர் உயிரியல் பூங்கா


 

2000 விலங்குகள்

 

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால், வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே தினத்தையொட்டி ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பார்வையாளர்கள் பூங்காவுக்கு வந்து இருந்தனர்.

 

 


வண்டலூர் உயிரியல் பூங்கா


மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் சிங்கம் சஃபாரி

 

கொரோனா காலகட்டத்தில் கடந்த கடந்த மூன்று ஆண்டில் வண்டலூர் பூங்காவில் வனப்பகுதியில் திறந்த வெளியில் விடப்பட்டு உள்ள சிங்கங்களை அதன் இருப்பிடத்திற்கே வாகனத்தில் சென்றுபார்க்கும் சிங்கம் சபாரி, மீனகம், சிறுவர் விளையாட்டு பூங்கா என பலவற்றுக்கு பூங்கா நிர்வாகம் அனுமதி அளிக்காமல் இருந்து வந்தது. இதன் பின்னர் நோய் தொற்று குறைந்ததும் பூங்காவில் மூடப்பட்டு இருந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், இரவு நேர விலங்குகள், சிறுவர் பூங்கா என ஒவ்வொன்றாக மீண்டும் திறக்கப்பட்டது.

 

 


வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம்


ஆனால் சிங்கம் சபாரி மட்டும் மீண்டும் தொடங்கப்படாமலேயே இருந்து வருகிறது. பார்வையாளர்களும் பலர் சிங்கம் சபாரி துவங்கப்பட்டிருக்கும் என நம்பிக்கையில், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனை அடுத்து கடந்த 6 மாத காலமாக  சிங்கங்களுக்கு பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

 

 நிறைவேறிய பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது


தற்பொழுது சிங்கம் உலாவிடத்தில் 7 சிங்கங்கள்  உள்ளன.  மான்கள் உலாவிட பகுதியில் ஏராளமான கடமான், புள்ளிமான் மற்றும் பிற மான் வகைகள் உள்ளன. பார்வையாளர்கள் வசதிக்காக உலா வரும் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் உலாவிட பகுதிக்கு செல்வதற்காக மட்டும் தனி வழியை அமைத்துள்ளது. பார்வையாளர்கள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதிகளின் வழியாக மான்கள் உலாவிடத்தை அடையலாம். பாதுகாப்பு சுவர் மற்றும் சுற்றுச்சூழல் சீரமைக்கப்பட்டு குலா மற்றும் நீர்நிலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள உலாவிடத்திற்கு,  செல்லும் வகையில் குளிர்சாதன பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் எளிதான பெற்றுச்செல்லும் வகையில் க்யூ ஆர் க்ரோ கோட் அடிப்படையிலான நுழைச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  



 

லயன் சஃபாரி கட்டணம் எவ்வளவு ? 

 

சபாரிக்கு பெரியவர்களுக்கு 150 ரூபாயும் குழந்தைகளுக்கு, 30 ரூபாயும் கட்டணத்தை வசூலிக்க திட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.