உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோயிலில் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சாமி தரிசனம் செய்தார். நடிகையுடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில்

 

உலகப் பிரசித்தி பெற்றதும் சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படுகின்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலில் விளங்கி வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்து செல்வது வழக்கமாக உள்ளது. சக்தி திருக்கோயில்களில் மிக முக்கிய கோயிலாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் விளங்கி வருவதால் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

 

 


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா சாமி தரிசனம்


விடுமுறை நாள் என்பதால் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தரிசித்து விட்டு சென்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு பல்வேறு பிரபலங்களும் வருகை புரிவது வழக்கம். அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

 


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா சாமி தரிசனம்


 

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 

 

இந்தநிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சாமி தரிசனம் மேற்கொண்டார். விஷாலின் ஆக்சன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தொடர்ந்து இவர் தமிழில் ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்ய லட்சுமி புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், கோட்சே, அர்ச்சனா 31 நாட் அவுட், அம்மு , கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர். குறிப்பாக தமிழில் உள்ள முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கிய வரலாற்று புனைவு படமான பொன்னின் செல்வன் படத்தில், பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் ஆதரவை பெற்றார்.

 


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் பொன்னியின் செல்வன் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா சாமி தரிசனம்


 

க்யூட் ஐஸ்வர்யா

 

இந்த நிலையில் தான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி , சாமி தரிசனம் மேற்கொண்டு பின் அவருக்கு திருக்கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவில் பிரகாரத்தினை வலம் வந்து கொடிமரத்தினை வணங்கி வழிபட்டார். அப்போது அவரை கண்ட சாமி தரிசனம் செய்திட வருகைதந்த பொதுமக்கள் பலரும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.



 

ஐஸ்வர்யா லட்சுமியும் தன்னை பிரபல நடிகையாக காட்டிக் கொள்ளாமல் தனியாக வந்திருந்தர். அனைவரிடம் சிரித்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து புகைப்படத்திற்கும் போஸ் கொடுத்தார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை பொதுமக்களும் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த சகஜமாக பழகிய விதத்தைப் பார்த்த பலரும் க்யூட் ஐஸ்வர்யா என கூறிவிட்டுச் சென்றனர்.