"வண்டலூர் உயிரியல் பூங்கா"
சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்காவில், சிங்கம் ,புலி, குரங்குகள் பறவைகள் என ஏராளமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளை பராமரிக்க விலங்கு பராமரிப்பாளர்கள் இருந்து வருகின்றனர். விலங்குகளை பராமரிப்பவர்கள் ஆண்களாகத்தான் இருப்பார்கள் என நம்முடைய எண்ணம் பொதுவாக தோன்றும்.
"நாகம்மாளின் கதை"
ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்காவளையோ புலிகளை 25 ஆண்டுகளுக்கு மேலாக பராமரித்து வருகிறார் நாகம்மாள். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் நாகம்மாள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளரும் புலிகளை பூனை குட்டிகள் போல் வளர்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்மை என்றாலே பாசம் என்பதற்கு உதாரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்ந்து வரும் ஒரு ஆண் புலி மற்றும் இரண்டு பெண் புள்ளிகளை பெயர் சொல்லி அழைப்பது மட்டுமில்லாமல், புலிகளை காலை முதல் மாலை வரை அவற்றுக்கு தேவையான அனைத்து பணிகளும் செய்து புலிகளிடமும் அன்பாக நடந்து கொள்ளும் நாகம்மாவின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
"பெயர் சொல்லி அழைத்தால் போதும்"
பொதுவாக புலிகள் என்பது கூச்ச சுபாவம் உடைய விலங்காகவே கருதப்பட்டு வருகிறது. அதேபோல் பிரச்சனை என்றால் தாக்குவதற்கு புலிக்கு நிகர் வேறு எந்த விலங்கும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இப்படிப்பட்ட புலியை தாய்மை உள்ளத்துடன் பெயர் சொல்லி அழைத்து அவற்றுக்கு தேவையான உணவுகள் மருந்துகள் ஆகியவற்றை தந்து வரும் நாகம்மாள் கூறுகையில், பல சமயங்கள் பேர் சொல்லி அழுத்தாலே போதும் புலி தானாக கூண்டுக்குள் வந்துவிடும் எனக் கூறுகிறார்.
புலிகளிடம் தினமும் பேசுவேன் எனவும் அவற்றுக்கு உடலில் ஏதாவது சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட தனக்கு தெரிந்து விடும் எனவும் உணர்ச்சி பொங்க கூறுகிறார் நாகம்மாள். புலியை பராமரிப்பதால் தனக்கு மாதச் சம்பளம் கிடைப்பதாகவும் இதன் மூலமே தனது குடும்பம் வாழ்ந்து வருவதாகவும் தழுதழுத்த குரலில் பேசுகிறார் நாகம்மாள்.
மகளிர் தினம் 2023
சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெண்கள் அதிகளவில் இயற்கை வளங்களை நம்பி வாழ்ந்தாலும், அவர்களுக்கு அவை குறைவாகவே கிடைப்பதோடு, பெண்கள் உணவு, நீர், எரிபொருள் முதலானவற்றைப் பெறுவதில் அவர்களின் பொறுப்பு அதிகரிக்கப்பட்டிருப்பது’ என ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளதோடு, காலநிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்வது, தீர்வை நோக்கி நகர்வது முதலான பணிகளை மேற்கொள்வது பெண்களின் தலைமை இன்றியமையாதது எனவும் கூறியுள்ளது.
இவ்வருட கருப்பொருள்
2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் "டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" ஆகும். பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் (CSW-67) வரவிருக்கும் 67வது அமர்வுக்கான முன்னுரிமைக் கருப்பொருளுடன் இந்தத் தீம் சீரமைக்கப்பட்டுள்ளது, இது “புதுமை மற்றும் தொழில்நுட்ப மாற்றம், பாலின சமத்துவத்தை அடைவதற்கான டிஜிட்டல் யுகத்தில் பெண்கள் அனைவருக்கும் கல்வி மற்றும் அதிகாரம் அளிக்கிறது. பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதிலும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் உருமாறும் திறனை இந்த கருப்பொருள் அங்கீகரிக்கிறது