கிளாம்பக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில்  கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம்

 

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில்  கட்டப்பட்டு வரும் அனைத்து உட்கட்டமைப்பு  வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பேருந்து நிலையம் இந்த மாதம்  முழுமையாக முடிக்கப்பட்டு வரும் ஜூன் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் திறக்கபடும் என்று எதிர்பார்க்கும் நிலையில், பேருந்து நிலையத்தை குறு சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து ஆய்வு செய்தனர். துறையின் செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பின்பு ஆய்வு செய்த அமைச்சர்கள் விரைவில் பணிகளை முடிக்குமாறு கேட்டுகொண்டனர்.

 



 

வெகு விரைவில் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது 

 

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடைபெற்று கொண்டிருக்கும் பணிகள் விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளோம். மாதத்திற்கு ஆறு முறை இது சம்பந்தமான ஆய்வு கூட்டங்களை துறையின், செயலாளர் முழு வேகத்தோடு நடத்தி கொண்டு எங்கு எல்லம் பணிகள் தோய்வு இருக்கின்றதோ, அங்கெல்லாம் பணிகளை விரைவு படுத்துவதற்கும் அதற்கு உண்டான தேவைகளை நிறைவுபடுத்துவதற்கும் முழு வீச்சில் உத்தரவு பிறப்பித்து வெகு விரைவில், இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.



 

அதிக நாட்கள் எடுத்து கொள்ளாமல் 

 

முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகள் நிறைவு பெற்றவுடன் அவரையே திறப்பு விழாவிற்கு அழைப்பதற்கு அமைச்சர்கள் நாங்களும் துறை சார்ந்த அதிகாரிகளும் முதலமைச்சரை கேட்டு கொள்ளபோவதாகவும், ஆகவே மிக விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வரப்படும். எவ்வளவு விரைவாக முடியுமோ நாலுகால் பாய்ச்சலில் இந்த பணிகளின் வேகத்தை கொண்டு செல்ல திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். கடந்த ஜனவரி மாதமே பொங்கலுக்கு திறப்பதற்காக சொல்லி இருந்தார்கள். இடையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பணிகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்த முறை அப்படி அதிக நாட்கள் எடுத்து கொள்ளாமல் மாதங்கள் கணக்கு இல்லாமல் வாரங்கள் கணக்கிலே இல்லாமல் நாட்கள் கணக்கிலேயே விரைந்து முடிவதற்கு உண்டான ஏற்பாடுகளை மேற்கொள்ளுவோம்” என்றார்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண