கடப்பாரையால் தகர்க்க முயற்சி
 
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே வாலாஜாபாத் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள திம்மராஜம் பேட்டையில் ஹிட்டாச்சி நிறுவனத்தின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. தனியார் ஏடிஎம் மையத்தில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.
 
ஏடிஎம் எந்திரம் உடைப்பு
 
அப்பொழுது இரவு கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் வழக்கம் போல சைரன் ஒலி எழுப்பிக்கொண்டு வந்து உள்ளனர். இதனைக் கண்ட கொள்ளையர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏடிஎம் இயந்திரத்தை கண்காணிக்க வந்த போலீசார் சென்று பார்த்தபொழுது ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
இயந்திரத்தில் மூன்று லட்ச ரூபாய் வைத்திருந்த நிலையில்
 
சம்பவம் உடனடியாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் அளித்தை தொடர்ந்து காஞ்சிபுரம் எஸ் பி சுதாகர், டிஎஸ்பி ஜூலியட் சீசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.  கொள்ளையடிக்கப்பட்ட இயந்திரத்தில் மூன்று லட்ச ரூபாய் வைத்திருந்த நிலையில் அதில் வாடிக்கையாளர்கள் எடுத்தது போக 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்
 
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் ஏதும் கொள்ளை போகாத நிலையில் போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர் .திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் வாலாஜாபாத் அருகே நடைபெற்றுள்ள ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

Continues below advertisement

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Continues below advertisement

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண