கலைமாமணி வி.கே.டி. பாலன் இன்று காலமானார். இவரது இறுதிச் சடங்கானது, சென்னை மந்தைவெளியில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவு:
பயண சுற்றுலாத்துறை முன்னோடியான வி.கே.டி. பாலன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர். இவர் மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் , உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
இவர், தனது வாழ்க்கை பயணம் குறித்தும் , அடிமட்டத்திலிருந்து மிகவும் உயர்ந்த நிலைக்கு வந்தது குறித்தான வாழ்க்கை பயணமானது, உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும் என்றே சொல்லலாம்.
கடின உழைப்பு:
இவர் , வாழ்க்கை பயணங்களை கூறுகையில், உணவுக்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் , படிப்படியாக கடின உழைப்பால், வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இவரின் கருத்துகள் மற்றும் பேச்சுகள் உந்துசக்தியாக இருக்கும் என்றுகூட சொல்லலாம். இந்நிலையில் , இவரது மறைவு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, இவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது , கலைமாமணி வி.கே.டி அவர்களின் மறைவை, ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மதுரா டிராவல்ஸ் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் பாலன், நவம்பர் 11, 2024 இன்று பக்கவாதத்தால் காலமானார்.
இறுதிச் சடங்கு:
இவரது, இறுதிச் சடங்கானது, நவம்பர் 12, 2024 செவ்வாய்க்கிழமை ( நாளை ), சென்னை, மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறும்.
குடும்பத்தினர், நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரது வாழ்க்கை மரபுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எங்களுடன் சேர்ந்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில், இவரது மறைவானது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.