சென்னை திருவான்மியூர் பகுதியில் நேற்று நாம் தமிழர் கட்சி தென் சென்னை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது..
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கட்சியை மேலும் பலப்படுத்துவதும், வருகின்ற உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது. அதற்கான களப்பணிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
உங்களுடைய தூண்டல் பெயரில் தான் கட்சி நிர்வாகிகள் அவதூறாக சமூக வளைதலங்களில் எழுதுகின்றனர் என்ற திருச்சி எஸ்.பி புகார் குறித்த கேள்விக்கு..
என்னை பற்றி எவ்வளவு அவதூறு எழுதுகின்றனர், அதெல்லாம் இவர் சொல்லி தான் எழுதுகின்றனர் என்று சொல்லவா.. அல்லது இவர் நேசிக்கும் தலைமை சொல்லி தான் எழுதுகின்றனர் என்று சொல்லலாமா..
என் குடும்பத்தை பற்றி என் தாயை பற்றி எவ்வளவு இழிவாக பேசுகின்றனர். அதற்கு நான் ஏதாவது பதில் பேசுகின்றேனா இல்லை. நான் அனைத்தையும் கடந்து போகிறேன்.
திடீரென வந்து நான் சொல்லி தான் எழுதுகின்றனர் என்று சொல்வது எப்படி என்னால் ஏற்றுகொள்ள முடியும். எனக்கு இதுவா வேலை? நான் கொள்கைக்காக போரடிக்கொண்டிருக்கிறேன்.
நான் எந்த பின்புலத்தில் இருந்து எவ்வளவு பெரிய கனவை கொண்டு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இந்த மண்ணில் நடந்த எந்த போராட்டதில் நான் நிற்கவில்லை என்று நினைக்கிறீர்கள்
ஆகையால் இதெல்லாம் சும்மா… நீங்களே fake id ஐ உருவாக்கி நீங்கலே திட்டிக்கிட்டு அதற்கு பதில் போட்டுவிட்டு, நாம் தமிழ் கட்சி தான் என்று சொன்னால் யார் கண்டுபிடிக்க முடியும்?
எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அது வேலை இல்லை அதெல்லாம் செய்யமாட்டார்கள். அப்படி செய்பவர்களை உடனே கட்சியை விட்டு நீக்கியிருக்கிறேன். கடந்த காலத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.
இப்படியெல்லாம் எழுத நான் கட்சி நடத்தவில்லை... ஆனாலும் இத்தகைய பதிவை நாங்கள் கண்டிக்கிறோம் கட்சியை விட்டு நீக்குகிறோம். எத்தனையோ வழக்கை பார்த்தாச்சு, அதில் இந்த வழக்கும் இன்று அவ்வளவுதான்.
2026 சட்டமன்ற தேர்தலில் தவேக - நாதக கூட்டணியா?
தம்பி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். அதற்கான பணிகளை செப்டம்பர் மாதம் முதல் தீவிரமாக செயல்படுத்த உள்ளார். மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்நோக்கி தம்பி விஜய் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் .
விஜய்யுடன் கூட்டணி சேர்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அது குறித்து ஆலோசனை செய்யப்படும். தம்பி விஜய் தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்