TTV Dhinakaran : சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, " அமமுக கட்சி சுதந்திரமானது ஆகும். எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி வைப்பீர்களா எனக்  கேட்கின்றனர்.


"அதிமுக செயல்படாத கட்சி"


எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை. அதிமுக கட்சி தற்போது செயல்படாத கட்சியாக உள்ளது. தலை இல்லாத நிலையில் அதிமுக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் அம்மாவின் தொண்டரே இல்லை  என்பதை வெளிப்படுத்துகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பேன் என்று எப்போது கூறியது கிடையாது” என்றார்.  ”நாளைய தேர்தல் வந்தாலும் வேட்பாளர்களுக்கு படிவங்கள் கூட வழங்க முடியாத நிலையில் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து செயல்பட அரைக்கால் சதவீதம் கூட வாய்ப்பில்லை" என்றார்.


”தொண்டர்கள் ஒன்று சேர வேண்டும்”


மேலும், ”திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்று சேர வேண்டும். அவ்வாறு ஒன்றுக்கூடி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


அதிமுக தலைமையே யார் என முடிவாகாத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது தலைமையில் கூட்டணி என்று கூறி வருகிறார். பதவி வெறி, பண பலம் இருப்பதனால் சிலர் ஆவணமாக பேசுவது சரியா? என்று டிடிவி  தினகரன் தெரிவித்தார். மேலும், வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தயாராக உள்ளேன் என்று தெரிவித்தார்.


”தனித்து நிற்கவும் தயார்”


கூட்டணிக்கு பாஜக, காங்கிரஸ் என இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளது. அதில் ஒன்றோடு தான் கூட்டணி வைக்க முடியும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் கூட்டணியில் இருப்பது தான் சரியானது. அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் தனித்து நிற்கவும் தயார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க


Chennai High Court : சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மாற்றம்: அடுத்தது யார்?


சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! முழு விவரம் உள்ளே!