யூடியூபில்  திடீரென, தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் விஸ்வரூபத்தை எடுத்தது. பலதரப்பட்ட சாமானிய மக்கள் தங்களது, திறமைகளையும் நகைச்சுவை உணர்வுகளையும் வெளி காட்டி சப்ஸ்கிரைப் பெற்று , பணம் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் பைக் ரைடராக தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டு youtube சேனலை உருவாக்கி வளம் வந்து கொண்டிருப்பவர் தான் TTF வாசன். TTF வாசனின் யூடியூப் சேனலை பார்க்க ஒரு ரசிகர் கூட்டம் ஆனது இருக்கிறது. 






 

பெரும்பாலானோர், 2கே கிட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு,  தனது ரசிகர்களை சந்திப்பதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட 2கே கிட்ஸ் அந்த சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தந்தது சர்ச்சை ஆனதால், அனைவர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார் TTF வாசன். பின்னர் யூடியூப் சேனலுக்கு இண்டர்வியூ கொடுக்க துவங்கி தொடர்ந்து தனது வாய் பேச்சாலும், களத்தில் ஏடா கூடமாக ஏதாவது செய்வதிலும், சர்ச்சையில் சிக்கி வந்தார் வாசன். அதிவேகமாக வாகனத்தை இயக்கி போலீசில் சிக்கிக்கொள்வது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

 

அதேபோல ஒரு முறை youtube பிரபலமான ஜி.பி முத்துவை வாகனத்தில் ஏற்றி சென்று, அதிவேகமாக சென்ற வழக்கிலும் சிக்கினார். வாசன் காவல் நிலையத்திற்கு செல்லும் பொழுது கூட மாஸ் பிஜிஎம் போட்டுக்கொண்டு,  கோட் சூட் உடன் சென்று வருவது என அலப்பறைக்கு பஞ்சம் இல்லாமல், தன்னை பிரபலப்படுத்தி கொள்பவர் வாசன். இந்தநிலையில், தனது அடுத்த கட்ட பரிமாணத்தை நோக்கி நகர ஆரம்பித்த வாசன். சினிமாவில் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் நடக்க இருப்பதாகவும், அதன் பெயர் மஞ்சள் வீரன் என பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, சினிமா பிரபலங்களுக்கே அதிர்ச்சி அளித்தார் TTF வாசன்.

 

அந்த திரைப்படத்திற்கு மஞ்சள் வீரன் என திரைப்படக் குழு பெயரிடப்பட்டது. இதன் பிறகு அவர் பேஸ்புக் லைவ் பேசிய பல வீடியோக்கள் கண்டன்டாக பரவி வந்தது. இந்தநிலையில், தன் ஒருபுறம் பல லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களில் யூடியூப்பிற்காக வீடியோ போடுவதை நிறுத்தாமல் செய்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவிற்கு ஹயபுசா என சொல்லக்கூடிய ( SUZUKI) நிறுவனத்தைச் சேர்ந்த 35 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.



 

அப்பொழுது, மழை காரணமாக காஞ்சிபுரத்தில் தங்கிய வாசன் தனது ரசிகர்களையும் சந்தித்து இருக்கிறார். வழி எங்கும் அவரது ரசிகர்கள் வீடியோவை,  எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்த நிலையில், மழை நின்ற பிறகு காஞ்சிபுரத்திலிருந்து மீண்டும் தனது பயணத்தை துவங்கி இருக்கிறார் TTF வாசன். இந்தநிலையில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட,  தாமல் என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது சாகசம் செய்ய முயன்ற TTF வாசன் தனது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. விபத்தின் போது காயமடைந்த TTF வாசன் கையில் எலும்பு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள் காயங்களுடன் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று வந்த TTF வாசன் மாவு கட்டு போடப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு செல்வதாக கூறி அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இப்படி ஒரு கோர விபத்து நடைபெற்ற போதிலும் வாசன் பெரும் காயங்கள் இன்றி சிறு காயங்களுடன் உயிர்த்தப்பியது குறிப்பிடத்தக்கது. அவருடைய நண்பர்கள் TTF வாசன் அணிந்திருந்த உடையின் மதிப்பே இலட்சக்கணக்கில் இருக்கும் என்பதால், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருப்பதாகவும் கூறினர்.