Train Cancelled: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (மார்ச் 17) சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை புறநகர் ரயில் சேவை:
சென்னையில் முக்கியமான போக்குவரத்து சாதனங்களில் மின்சார ரயில்களின் பங்கு என்பது அளப்பறியது. குறைவான கட்டணத்தில் சிரமமின்றி எளிதாக பயணம் செய்யும் வகையில் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை குறைந்த கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - சென்னை கடற்கரை, திருமால்பூர் - சென்னை கடற்கரை, திருவள்ளூர், ஆவடி, வேளச்சேரி என பல வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சாதாரண கட்டணம், எக்ஸ்பிரஸ் என இருவகையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
44 ரயில்கள் ரத்து:
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகளே வார இறுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை மறுநாள் (மார்ச் 17) சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் சேவை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை மறுநாள் காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
சிறப்பு ரயில்கள்:
இதுகுறித்து தெற்கு ரயில்வே முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காலை 11.55, நண்பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55 பகல் 2.40, பகல் 2.55 மணிக்கு தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ளது.
மேலும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.40, காலை 10.55, காலை 11.30, காலை 11.05, பகல் 1.00 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் - தாம்பரம் இடையே காலை 9.30 மணிக்கும், தாம்பரம் - திருமால்பூர் இடையே நண்பகல் 12.00 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
Kavitha Arrest: சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!