சென்னை  கடற்கரை -  செங்கல்பட்டு ரயில்கள்


சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் (Chennai Beach to Chengalpattu Train) சென்னைக்கு மிக முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையாக இருப்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். பேருந்தில் செல்வதை விட ரயிலில் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும். அதே போன்று ரயில் கட்டணமும் மிகக் குறைவு என்பதால் வேலைக்கு செல்பவர்கள்  மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். பேருந்தில் செல்வதை விட ரயிலில் செல்வது கட்டணம் குறைவு என்பதால், தினமும் வேலைக்கு செல்பவர்கள் ரயில் பயணத்தை விரும்புவார்கள்.


 


 


 பராமரிப்பு பணிகள்


 பொதுவாக மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடங்களில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கமான ஒன்று. அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொழுது ரயில்கள் தாமதமாகுவதும், அல்லது ரயில்கள் பாதி வழியில்லையோ அல்லது முழுமையாகவோ ரத்து செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் முக்கிய ரயில்கள் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது


 


இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி முதல் பகல் 12:50 மணி வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு செல்லும் இரவு 10:40 முதல் 11:59 வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


அதேபோன்று தாம்பரம் செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்குச் செல்லும் 10:30 முதல் 1:30 வரை அதே போன்று இரவு 11 மணி மற்றும் 11:40 மணிக்கு புறப்படும் ரயில்கள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது



இதேபோன்று செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10 மணிக்கு செல்லும்மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9:30 மணிக்கு, திருமால்பூரில் இருந்து காலை 11:05 மணிக்கு புறப்படும் கடற்கரை செல்லும் ரயில்கள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இரவு நேரத்தில்சென்னை கடற்கரை கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட்ட மின்சார ரயில் சேவை ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


 


சிறப்பு ரயில்கள்


 


பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை முதல் பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து பல்லாவரம் இடையே காலை 9:30 மணி, 9:50, 10:10,10:30,10:50,11:10,11:30,11:50,12:10,12:30,12:50, அதேபோன்று இரவு நேரத்தில் 10:40,11:05,11:30,11:59 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது


 


கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு இடையே, காலை 10:45, காலை 11:10, பகல் 12 மணி, பகல் 12:50 மணி, மதியம் 1:30 மணி, மதியம் 1:55 மணி, இரவு 11.50 மணிக்கு, செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணி, காலை 10:30 மணி, காலை 11 மணி, 11 45 மணி, பகல் 12:30 மணி, பகல் ஒரு மணி, இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது