போலீஸ் வங்கி கணக்கில் பணம் திருட்டு
சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் ( வயது 44 ) இவர் வியாசர்பாடி போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ம் தேதி இவரது மொபைல் போன் எண்ணுக்கு டிராபிக் நான்கு சக்கர வாகன ரொக்க வரி குரூப் இ - செலான் ஏ.பி.கே., பைல்' என்ற பெயரில் , லிங்க் வந்துள்ளது. இந்த லிங்க்கை சுரேஷ் குமார் ஓபன் செய்த சில வினாடிகளிலேயே திடீரென மொபைல் போனின் கட்டுப்பாடு பறிபோனது.
சம்பள கணக்கில் பணம் திருட்டு
மேலும் சுரேஷ்குமாரின் எச்.டி.எப்.சி., வங்கி சம்பள கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் 10,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. மீண்டும் 17ம் தேதி சம்பள வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிர்ச்சியடைந்த சுரேஷ் குமார் கடந்த 19ம் தேதி ஆன்லைன் மூலம் பணமோசடி நடந்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
காரில் வந்து ஆடுகளை திருடிய நான்கு பேர் கைது
சென்னை சேலையூர் அடுத்த வேங்கைவாசல் , பாரதிதாசன் தெருவைச் சேர்த்தவர் பன்னீர் செல்வம் இவர் 30 ஆடுகள் , 10 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 16 - ம் தேதி வேங்கை வாசல் இந்திரா நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு , உணவிற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஆடுகளை ஓட்டிவர சென்ற போது 13 ஆடுகள் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் காரில் வந்த ஆறு பேர் மேய்ச்சலில் இருந்து ஆடுகளை திருடி சென்றது தெரிய வந்தது.
காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். இதில், பாலவாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் ( வயது 29 ) பாலகிருஷ்ணன் ( வயது 40 ) கண்ணகி நகரைச் சேர்ந்த அயாஸ் கதின் ( வயது 25 ) நீலாங்கரையைச் சேர்ந்த தாரிக் ரகுமான் ( வயது 42 ) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆடு திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அயாஸ் சுதின், தாரிக் ரகுமான் ஆகியோர் கோழி மற்றும் மாட்டிறைச்சி கடை நடத்தி வருவது தெரிய வந்தது. இவர்கள் போன்று வேறு எங்காவது திருட்டில் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.