செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான ஏரிகளான நந்திவரம் மற்றும் ஊரப்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை முகாம்கள், மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்த இடைவிடாத கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று இரவு 18 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில் வல்லாஞ்சேரி ஏரி அதன் முழுக்கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டிய சரக்கு வாகனங்கள் ஆம்புலன்ஸ்கள் போன்றவை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். கூடுவாஞ்சேரி முதல் தைலாவரம் வரை ஒரு வழிப் பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. கூடுவாஞ்சேரி முதல் சிங்கபெருமாள் கோவில் வரை வாகனங்களின் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முடங்கியது,



 



 




 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 



 


யூட்யூபில் வீடியோக்களை காண