தமிழகத்தில் இன்று ( 27.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த தகவல்களை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.


துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேர மின்தடை செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகள் என்பதை காணலாம்.


சென்னை ; 


பொழிச்சலூர் பகுதியில் பம்மல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான பம்மல் பகுதி (சிக்னல் அலுவலக சாலை), வெங்கடேஸ்வரா நகர் (பகுதி), மூவர் நகர் , அகத்தீஸ்வரர் கோயில் 1வது & 2வது தெரு , ஆண்டாள் நகர் , கவுல் பஜார், இந்திரா நகர், சிவ சங்கர் நகர், ஈசிடிவி நகர், மல்லியம்மா நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


ஸ்ரீபெரும்புதூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


வேலூர் ;


காவேரிப்பாக்கம் மற்றும் சிப்காட் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் ராணிப்பேட்டை, பிஹெச்இஎல், அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல் மற்றும் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


தேனி ;


கண்டமனூர் விளக்கு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


திருச்சி ; 


கொளக்குடி, துவாக்குடி, பூவாளூர், காட்டுப்புத்தூர், தொட்டியம் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோணப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர், சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாங்குடு, லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு, நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம், பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிக்குளம், வரதராஜபுரம், ஏழுர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


பெரம்பலூர் ; 


இலந்தைகுளம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


கோவை ; 


ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


கனியூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.


திருப்பூர் ;


பொங்கலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.